கட்டிலில் கள்ளக்காதலனுடன் கட்டிப்புரண்டு உல்லாசம்...

Advertisement

கோவை மாவட்டத்தில் பழகிய நான்கு நாட்களில் கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெகமம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த நாகராஜன் என்பவரும், மதுக்கரையைச் சேர்ந்த அமுதா என்பவரும் மறுமணம் செய்துள்ளனர். இதையடுத்து, நாகராஜனும், அமுதாவும் சீரப்பாளையம் பகுதியில் உள்ள அமலன் மினரல்ஸ் என்ற கோலப்பொடி நிறுவனத்தில் தங்கி வேலைபார்த்து வருகின்றனர்.

அந்த நிறுவனத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் வெல்டராக வேலை பார்த்து வந்தார். அவருக்கும் அமுதாவிற்கும் இடையே ஏற்பட்ட நட்பு நான்கே நாட்களில் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் பணிக்காரணமாக வெளியே சென்ற நேரம் பார்த்து, சங்கரும், அமுதாவும் உல்லாசமாக இருந்துள்ளனர். அந்தே நேரம்பார்த்து நாகராஜன் வர, இருவரும் கட்டிலில் உல்லாசம் அனுபவிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்ற நாகராஜன், சங்கரை தாக்கியுள்ளார். அப்போது, சங்கர், கையில் கிடைத்த சுத்தியலால் நாகராஜன் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, அமுதாவும், சங்கரும், நாகராஜனின் சடலத்தை நிறுவன வளாகத்தில் இருந்த மண்ணை போட்டு மூடி வைத்துள்ளனர்.

இதையடுத்து தன்னை காப்பாற்றும்படி, நடந்த விஷயத்தை முதலாளியிடம் சங்கர் கூறியுள்ளார். அப்போது சங்கரை ஒரு அறையில் இருக்கும்படி கூறிவிட்டு, ரகசியமாக மதுக்கரை போலீசாருக்குத் முதலாளி தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மண் போட்டு மூடி வைத்திருந்த நாகராஜனின் சடலத்தை மீட்டனர்.

அதனைத் தொடர்ந்து சங்கர் மற்றும் அமுதா மீது கொலை வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement
/body>