விளை நிலங்களுக்கு மத்தியில் எண்ணெய் குழாய்கள்: விவசாயிகள் போராட்டம்

Advertisement

கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை பாரத் பெட்ரோலியம் எண்ணெய் குழாய்களை விவசாய நிலங்கள் வழியாக 6 மாவட்டங்கள் வழியாகக் கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளது.இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெட்ரோலிய பைப்லைனை சாலைகள் ஓரமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி வந்தனர். இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாய நிலங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் களப்பணிகள் நடத்த மாட்டோம் என்று வருவாய்த் துறை மற்றும் எண்ணெய் நிறுவன நிர்வாகமும் தெரிவித்திருந்தது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி நாமக்கல் மாவட்டம் சின்ன ஆனங்கூர் மற்றும் இளையம்பாளையம் பகுதிகளில் அதிகாரிகள் இன்று களப்பணி மேற்கொண்டனர். இதனைக் கண்டித்து நாமக்கல் மாவட்டம் சின்ன ஆனங்கூர் பகுதியிலும் உடையாம்பாளையம் பகுதியிலும் இன்று விவசாயிகள் வயல்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது கோவை இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை 6 மாவட்டங்கள் தமிழகத்தின் வழியாக எண்ணெய் குழாய் கொண்டு செல்லப்பட உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். வருவாய்த்துறை அதிகாரிகள் ஐ டி பி எல் அதிகாரிகள் விவசாய நிலங்களில் எந்த பணியும் மேற்கொள்ள மாட்டோம் என்று உறுதியளித்தனர். ஆனால் சொன்னதையும் மீறி தற்போது களப்பணி செய்வதற்காக வந்துள்ளனர் இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

Advertisement
/body>