அமெரிக்காவில் ஹெலிகாப்டர் இன்ஜீனில் இயங்கும் சூப்பர் பைக் தயாரிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 300 கிலோ மீட்டருக்கும் மேல் வேகத்தில் செல்லும் இந்த பைக்கின் விலை இந்திய மதிப்பில் ரூ. 12 கோடி ஆகும். சோதனை ஓட்டத்தின் போது, அதிகபட்சமாக 365 கி.மீ வேகத்தில் இயக்கிப் பார்க்கப்பட்டது. ஆனால், மணிக்கு 400 கி.மீ வரை வேகத்தை அதிகரிக்க முடியும் என வல்லுநர்கள் சொல்கின்றனர். இந்த மோட்டார் சைக்கிளில் ரோல்ஸ் ராய்ஸ் - ஆலிசன் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பான கேஸ் டர்பைன் இன்ஜீன் பொருத்தப்பட்டிருக்கிறது.இது ஹெலிகாப்டர்களின் பயன்படுத்தப்படும் இன்ஜீன் ஆகும். இதன் பெயர் 420 ஆர்ஆர் மோட்டார் சைக்கிள்.
உலகிலேயே அதிக விலை கொண்ட மோட்டார் சைக்கிள் என்ற வகையில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.