கோவை ராமநாதபுரத்தில் பிரபலமான முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் மதிய நேரத்தில் 814 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணத்தையும் மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றார்.
பிரபலமான முத்தூட் மினி நிறுவனத்தின் கிளை கோவை ராமநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்குள் நேற்று முன்தினம் மதியம் 3 மணி அளவில் முகத்தை துணியால் மறைத்தபடி நிதி நிறுவனத்துக்குள் அடையாளம் தெரியாத மர்மநபர் நுழைந்தார். பின் அலுவலத்தில் இருந்த 2 பெண் ஊழியர்களை தாக்கினார். அதில் 2 ஊழியர்களும் மயக்கம் அடைந்து விட்டதாக தெரிகிறது. இதனையடுத்து சாவி மூலம் பெட்டக அறையை திறந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு மர்ம தப்பி சென்று விட்டார்.
நிதி நிறுவனத்தில் கொள்ளை நடந்த சம்பவத்தை அறிந்த போலீசார் 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 812 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொள்ளை நடந்த முத்தூட் மினி நிறுவனத்தில் காவலாளி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் நிறுவனத்தை பற்றி நன்கு தெரிந்த நபரே இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.