சென்னையில் பயங்கரம் : ராணுவ ஹவில்தாரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்த வீரர்

by Nagaraj, Aug 27, 2019, 12:44 PM IST

சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் ஹவில்தாரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர், தானும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தில் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. இங்கு ஹவில்தார் ரேங்க் அதிகாரியாக பணிபுரியும் பிரவீண் குமார் என்பவருக்கும் அவருக்கு கீழ் ரைபிள் மேனாக பணிபுரியும் ஜெக்தீர் என்ற ராணுவ வீரருக்கும் இடையே பணி தொடர்பாக சில நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் பிரவீன் குமார் மீது ஜெக்தீஷ் கோபமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில், ஹவில்தார் பிரவீன் குமார் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அறைக்குள் நுழைந்த ஜெக்தீர், அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்னர் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு ஜெக்தீரும் தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு பிற ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று பார்த்த போது இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ஊடுருவிய லஷ்கர் தீவிரவாதிகள் கோவையில் பதுங்கல்? சந்தேகப்படும் நபரின் புகைப்படம் வெளியீடு


Leave a reply