பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை வீடியோ எடுத்து நண்பர்களுக்குப் பகிர்ந்த காமக் அரக்கர்கள்..!

Schoolgirl raped lust monsters videotaped and shared with friends

by Logeswari, Sep 28, 2020, 21:35 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 1 படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து அதனைப் படம் பிடித்து தனது நண்பர்களுக்குப் பகிர்ந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி.இவர் அந்த கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.இச்சிறுமி தனது வகுப்பில் பயிலும் இரு மாணவர்களுடன் நண்பர்களாக இருந்துள்ளார்.

இந்நிலையில் அந்த இரு மாணவர்கள் இந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குக் கொண்டு சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
அதுமட்டும் இல்லாமல் அவர்கள் செய்யும் செயல்களை போன் மூலம் படம் பிடித்து அந்த வீடியோவினை தங்களது நண்பர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்துள்ளனர்.இந்த வீடியோ விஷயம் அச்சிறுமியின் தந்தை காதுக்கு எட்டியதை அடுத்து அக்கிராமத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் இரு மாணவர்கள் மீது புகார் அளித்துள்ளார்.போலீசார் வழக்குத் தொடுத்து இரு மாணவர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் ஆகியவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Crime News

அதிகம் படித்தவை