தமிழ் மொழியை போற்றிய பிக் பாஸ் நடிகைஆங்கிலத்தை விடத் தமிழ் மொழி சிறந்தது!!

by Logeswari, Sep 28, 2020, 21:39 PM IST

பிக் பாஸ் சீசன்-3யில் மக்களால் குறைந்த ஓட்டு பெற்று வெளியாகி வந்த அபிராமி பத்திரிக்கை சந்திப்பில் ஆங்கிலத்தை விட நம் தாய் மொழியான தமிழே சிறந்தது என்று கூறியுள்ளார்.கடந்த சில வருடங்களாக பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி நடிகர் கமலஹாசனால் சிறப்பாகத் தொகுக்கப்பட்டு வருகின்றன.வெளிநடப்பு ஏதும் அறியாமல் மற்றும் தொலைப்பேசி வசதி இல்லாமல் ஒரு வீட்டில் சக மனிதர்களுடன் 100 நாட்கள் இருப்பதே இந்நிகழ்ச்சியின் முதல் கட்ட விதி.இந்நிகழ்ச்சியின் முதல் பருவத்தில் நடிகரான ஆரவ் வெற்றி பெற்றார் இவரைத் தொடர்ந்து இரண்டாவது பருவத்தில் நடிகையான ரித்துவிகா வெற்றி பெற்றுள்ளார்.

மூன்றாவது பருவப் போட்டி நடைபெற்ற போது மக்களால் குறைந்த ஓட்டைப் பெற்று வெளியாகினார் அபிராமி.இந்நிலையில் இவர் மீடியாவிடம் கூறியதாவது:-
யாருக்கும் எதையும் காண்பிப்பதற்காக நான் ஆங்கிலத்தில் பேசவில்லை தமிழ் தான் மிகவும் சிறந்த மொழி எனவும் வேறு மொழி என் மனதில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார் ஆங்கிலமொழியை ஒப்பிடும்போது 'தமிழ் மொழி தான் கெத்து' என்று தன் மனதில் உள்ள குழப்பங்களை வெளியிட்டார் அபிராமி.

நான் ஆங்கிலவழியில் கல்வி கற்றதால் பெரும்பாலும் ஆங்கிலத்தைக் கலந்து பேசுவது ஒரு வித பழக்கமாக மாறிவிட்டது.அதுமட்டும் இல்லாமல் நான் சில சமயம் பல மொழிகள் கலந்து பேசுவேன்.சில சமயம் ஹிந்தி,தெலுங்கு போன்ற மொழிகளைக் கலந்து பேசுவேன்.இதற்குக் காரணம் பல மொழிகள் தெரிந்த நண்பர்களுடன் பேசுவதால் வந்த பழக்கமே என்று தெரிவித்துள்ளார்.தமிழில் தொடர்ந்து பேசுவது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் அப்போது தான் மக்கள் இடையே தொடர்பில் இருக்க இயலும் என்று கூறி விடைபெற்றார் அபிராமி.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Bigg boss News