முதியவரின் காம வெறியால் 15 வயது சிறுமி கர்ப்பம் அதிர்ச்சியில் உள்ள குடும்பத்தினர்கள்

by Logeswari, Oct 1, 2020, 14:34 PM IST

விருதுநகரில்,முதியவர் ஒருவர் 15 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதால் தற்போது அச்சிறுமியின் வயிற்றில் குழந்தை உருவாகி 5 மாதக் காலம் கர்ப்பமாக உள்ளார்.


விருதுநகர்,தர்மம் என்ற ஊரில் வசிப்பவர் 15 வயது சிறுமி, அதே ஊரை சேர்ந்தவரின் கருப்பையா வீட்டிற்கு தினமும் சென்று தொலைக்காட்சி காண்பதை அச்சிறுமி வழக்கமாக கொண்டுள்ளார்.இதனை சாதகமாக பயன்படுத்திய கருப்பையா சிறுமி என்று கூட நினைக்காமல் தவறான முறையில் நடந்துள்ளதாக தகவல்கள் எழுந்துள்ளது .ஒரு சில நாட்களுக்கு முன் சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்ததாள். இதனால் சிறுமியின் அத்தை சந்தேகப்பட்டு சிறுமியிடம் விசாரித்தபோது 5 மாதக்காலம் சிறுமியிடம் கருப்பையா தவரானமுறையில், நடந்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இந்நிலையில் சிறுமியை மருத்துவனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்த போது சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார் என்று மருத்துவரால் உறுதி செய்யப்பட்டது. இதனால் சிறுமியின் குடும்பத்தார்கள் ஆத்திரம் அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.போலீசார் விரைந்து சென்று கருப்பையாவை கைது செய்து தீவீரமாக விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Crime News

அதிகம் படித்தவை