அசாம் மாநிலம் கவுகாத்தி,பமோஹி கிராமத்தில் அக்ஷர் என்ற பள்ளி இயங்கி கொண்டுவருகின்றது.இப்பள்ளியின் சிறப்பம்சம் என்னவென்றால், கற்பதற்கு கட்டணம் இல்லாமல் பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டு வந்தால் மட்டுமே இலவச கல்வி, என்று புதுவிதமான நடைமுறையில் கல்வி வழங்கப்பட்டு வருகின்றது.ஒரு வாரத்திற்கு 20 பிளாஸ்டிக் பைகளை கொண்டுவரவேண்டும்.அப்படி சேகரித்து கொண்டு வரும் பிளாஸ்ட்டிக் பைகளை அப்பள்ளியின் மேலாண்மை குழு அனைத்தையும் சேகரித்து மறுசுயர்ச்சியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
இம்முறையை அக்ஷர் பள்ளி சுமார் 2016 ஆண்டில் இருந்து வெற்றிகரமாக பெயல்ப்படுத்தி வருகிறது.இப்பள்ளியில் மாணவர்களை சேர்க்கின்ற படலம் தொடங்கும் பொழுதே பெற்றோர்களிடம் பிளாஸ்டிக்கை எரிக்கமாட்டோம் என்று உறுதிமொழி பெற்று கொள்கின்றனர்.அதன்வழியே பெறறோர்களும் அவ்வுறுதிமொழியை கடைபிடித்து வருகின்றனர்.
கவுகாத்தி நகரில் தினமும் 37 டன் குப்பைகளை சேகரிக்கின்றனர் என்பதை என்விரோன் தொண்டு நிறுவனம் ஒரு கணக்கீட்டில் தெரியப்படுத்தியுள்ளது.அதுமட்டும் இல்லாமல் அக்ஷர் பள்ளி மறுசுயற்சி என்கின்ற பெயரில் பலவித தேவையான பொருட்களை உருவாக்குகின்றன.இந்த இலவசக் கல்வி மூலம் நிறைய ஏழை மாணவர்கள் பயனடைந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இப்பள்ளி 20 மாணவர்கள் விதம் தொடங்கி, காலங்களும் கடந்து செல்கின்ற வேளையில் தற்பொழுது 100 மாணவர்கள் விதம் கல்வி கற்று வருகின்றனர்.'கல்வி என்பது வியாபாரம் இல்லை',தனி மனிதன் கல்வி கற்பது அவனின் உரிமை ஆகும்.