மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்..

by Logeswari, Oct 15, 2020, 10:43 AM IST

ஓசூரில் கணவன், மனையின் மேல் உள்ள சந்தேகத்தின் அடிப்படையில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓசூரை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் அதே ஊரில் உள்ள சிப்காட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னே பெங்களூரை சேர்ந்த சிந்துஜா (27) என்ற பெண்ணுடன் பெரியவர்களால் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.இந்நிலையில் சிந்துஜா தினமும் போனில் அதிக நேரம் யாரோ ஒருவரிடம் பேசி வந்துள்ளார். இதனை நோட்டம் செய்த மணிகண்டனின் மனதில், சிந்துஜாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைக்குறித்து மணிகண்டன் விசாரித்த பொழுது சிந்துஜா திமிறாக நடந்துள்ளதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் கத்தியால் மனைவியின் கழுத்தை கதற கதற அறுத்துள்ளார். அந்த பெண் சம்பவ இடத்திலே இறந்து இரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மணிகண்டன் தன் மனைவியை கொலை செய்த காரணத்திற்காக அட்கோ போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். போலீஸ் மணிகண்டன் மேல் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். பிறகு சிந்துஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Get your business listed on our directory >>More Crime News

அதிகம் படித்தவை