Thursday, May 13, 2021

குரூப்பிசம்,அனிதாவின் டார்கெட் ,ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் - பிக் பாஸில் என்ன நடந்தது? நாள் 10.

Bigg Boss4 Day 10 Review

by Mahadevan CM Oct 15, 2020, 10:54 AM IST

நேற்றைய எவிக்‌ஷன் ப்ரீ பாஸ் நிகழ்வைப் பற்றித் தான் ஆங்காங்கே ஒன்று கூடிப் பேசினார்கள். தான் எப்படி இந்த ஸ்டேட்டர்ஜியை தேர்ந்தெடுத்து, சரியாக விளையாடினேன் என்று ஒவ்வொருவரிடமும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். நடுவில் கேப்பி, ரம்யா இருவரையும் பாராட்டிப் பேசவும் தவறவில்லை. ஆரி, பாலாஜியும் சுரேஷை பாராட்டினார்கள்.

போன சீசன்ல வனிதாவைக் குறிப்பிட்டு, அவங்க பேசினது எல்லாமே கரெக்ட், ஆனா தேவையில்லாத இடத்துல கூட பேசிட்டாங்க. இந்த தடவை அந்த இடம் ரம்யாவுக்கு தான்னு சொன்னாரு சுரேஷ். ரியோவுக்கு அவரோட பொண்ணு போட்டோ வந்தது போல. அதைப் பார்த்து கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு போட்டோவை மறைச்சு வச்சாரு.

நைட்டு ரம்யா, ஆஜித், ஷிவானி மூணு பேரும் பேசிட்டு இருக்காங்க. என்னோட டர்ன் வரும்போது நான் பேசினேன். மத்தவங்களுக்காக நான் பேச முடியாது. சுரேஷ் செம்ய்சது தப்புனு சொல்ல முடியாது. நமக்கு அது புரியாம போச்சுனு சொல்லிட்டு இருந்தாங்க.

நாள் 10

கமலா கலாசானு ஒருபாட்டு. இந்த பாட்டெல்லாம் கேட்டதே இல்லையே. அப்ப வயசாகிடுச்சா எனக்கு.... சோ சேட்.

எவிக்சன் பிரீ பாஸை வச்சு ஆஜித்தை கிண்டல் செஞ்சுட்டு இருந்தார் கேப்பி. நடுவில் ஆஜித் எவிக்சன் ப்ரீ பாசை மறைச்சு வைக்கப் படாத பாடுபட்டான். எப்படியாவது அதை எடுக்கறதா அனிதா அவன்கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க.

நான் நேத்து பேசினது சரியா, நான் நடந்துகிட்டது சரியானு கருத்து கேட்டுட்டு இருந்தாரு ரியோ. கூட இருந்தது கேப்பி, அனிதா, நிஷா, ஆஜித். அடுத்து சுரேஷ் கிட்ட நேரடியா பேசறாரு ரியோ. நேரடியான கேள்விகள் கேட்டாரு. குரூப்பிசம்னு சொல்றதுக்கு இங்க என்ன நடந்தது? ஏன் அப்படி சொன்னீங்க? எதுக்கு மத்தவங்களை பத்தி பேசனும். இப்படி எந்த கேள்விக்கும் நேரடியா பதில் சொல்லலை சுரேஷ். எனக்கு தோணுச்சு, நான் சொன்னேங்கற ரேஞ்சுல தான் எல்லாமே இருந்தது.

வேல்முருகன் + ரியோ ரெண்டு பேரும் சேர்ந்து பிக்பாஸுக்கு போன் பண்ணி டிபன் ஆர்டர் செஞ்சு விளையாடிட்டு இருந்தாங்க. ரேகாவும் பாலாஜியும் சனம் பத்தி பேசறாங்க. எல்லாரோடையும் சண்டை போட்டு, தன்னை எல்லாரும் கார்னர் செய்ய வைக்கறது அவங்க ப்ளான்னு சனம் பத்தி பாலாஜி சொல்றாரு. சனம்,, அனிதா கிட்டப் போய் ஏன் என்கிட்ட பேச மாட்டேங்கறிங்கனு கேட்டாங்க. நான் எப்பவும் போலத் தான் இருக்கேன்னு சொல்லியும் சனம் கேட்டுக்கலை.

இந்த வாரத்துக்கான லக்சரி பட்ஜெட் டாஸ்க்,ஆட்டம் கொண்டாட்டம்:

லான்ல ஒரு கன்வேயர் பெல்ட் செட் பண்ணிருந்தாங்க. அதுல வர பெட்டில ஒரு ஜோடிக்கு ட்ரெஸ் வரும். அவங்க அதை போட்டுட்டு உடனடியா லிவிங் ஏரியால வந்து பாட்டுக்கு டான்ஸ் ஆடனும்..

முதல் ஜோடி ஆஜித் + கேப்பி. ட்ரெஸ் போடறதுக்குள்ள ரவுடி பேபி பாட்டு போட்டுட்டாங்க. ஓடி வந்து முதல்ல ஆட ஆரம்பிச்சது ஆஜித். நல்லாவே மேனேஜ் பண்ணினான். கேப்பி வழக்கம் போல செம்ம.

அடுத்து ரியோ + நிஷா. ஆடலுடன் பாடலை கேட்டு பாடல். ஓரளவுக்கு மேனேஜ் பண்ணிட்டாங்க.

அடுத்த ஜோடி வேல்முருகன் + சனம். வச்சுக்கவா உன்னை மட்டும் பாட்டு. ரெண்டு பேரும் ஓரளவு ஆடினாங்க. போன சீசன்ல இந்த மாதிரி டான்ஸ் ஷோ நடக்கும் போது , ஆடத் தெரியாதவர்களுக்கு, சாண்டி ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்தது நினைவிருக்கலாம். இந்த முறை அதை கேப்பி செய்யலாம். சில இடத்தில் அதை செஞ்சாங்க. இன்னும் முன்னாடி வந்து செய்யலாம்.

அடுத்து ப்ரொமோல கலக்கின சுரேஷ் அனிதா ஜோடி. கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கறதுல பிக்பாஸை அடிச்சுக்க ஆளே இல்லை. சுரேஷ் முதல் ஆளா வந்து ஆட ஆரம்பிச்சாரு. அதுக்கப்புறம் வந்து ஜாயின் பண்ணின அனிதா அசத்திட்டாங்க. ரெந்டு பேரும் நல்ல எக்ஸ்பிரஷன்ஸ், நல்ல கெமிஸ்ட்ரி. நல்ல எண்டர்டெயின்மெண்ட்.

கிச்சன் ஆரியாவுல பாலாஜி, சனம் ரெண்டு பேருக்கும் திரும்ப ஒரு ஆர்கியூமெண்ட். பாலாஜி தன்கிட்ட பேசவே வேணாம்னு சனம்கிட்ட சொல்லிருக்காரு. இருந்தும் சனம் விடவே இல்லை. ஆரியும், வேல்முருகனும் சின்ன டிஸ்கஷன். வேஷ்டி மேட்டர். சுரேஷ் கற்பனை பண்ணி பேசறதா வேல்முருகன் சொல்றாரு. வேஷ்டி மேட்டர் பேசும் போதெல்லாம் ரொம்ப உணர்ச்சி வசப்படறாரு வேல்முருகன்.

சோம், ரியோவுக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் ட்ரைனிங் கொடுத்திருப்பாரு போல. அப்ப சோம் மேல அடிபடுது. ரியோ சாரி சொல்ல, அனிதாவும், நிஷாவும் அதை கலாய்க்கிறார்கள். யார்கிட்டயும் சொல்லக்கூடாதுனு சத்தியம்வேற வாங்கிட்டாங்க.

தினசரி டாஸ்க் ஆரம்பிக்குது. ஒரு வட்டத்தைச் சுத்தி நின்னுட்டு ஒரு சின்ன பாலை ஒரு பவுல்ல போடனும். ரெண்டு பேர் ஜோடியா விளையாடனும். நல்ல இண்டரஸ்டிங்கா இருந்தது. கடைசியா வேல்முருகனும், சனமும் ஜெயிச்சாங்க. அடுத்த வாரம் இவங்களை எவிக்சன் செய்ய முடியாது. இதுல சனம் ஜெயிச்ச உடனே வேல்முருகனோட ரியாக்சன் ரொம்பவும் அதீதம். சனமை கட்டிபிடிச்சு தூக்கி, விடவே இல்லை.. கொஞ்சம் கண்ட்ரோல் செஞ்சுக்கலாம்.

சம்யுக்தாவுக்கு அனிதா தன்னை டார்கெட் செய்யறாங்களோனு ஒரு கவலை. நைட் அந்த சந்தேகத்தை அனிதா கிட்டயே கேட்டு பேசறதோட நாள் முடியுது....

நாளைக்கு பார்ப்போம்...

You'r reading குரூப்பிசம்,அனிதாவின் டார்கெட் ,ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் - பிக் பாஸில் என்ன நடந்தது? நாள் 10. Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News

அண்மைய செய்திகள்