கண்ணடித்த நடிகை படு கவர்ச்சிக்கு துணிந்தார்.. திட்டித்தீர்த்த நெட்டீஸன்கள்..

by Chandru, Oct 15, 2020, 10:43 AM IST

ஒரு அடார் லவ் மலையாள படம் மூலம் கண்ணடித்துப் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். 2 வருடத்துக்கு முன் வெளியான இப்படத்தில் பள்ளிக்கூட காதல் காட்சியில் காதலனைப் பார்த்துக் கண்ணடித்து நமட்டு சிரிப்பும், விரல்களால் துப்பாக்கிபோல் பாவனை காட்டி விரல்களுக்கு முத்தமிட்டு சுடுவது போலவும் பிரியா செய்த ஸ்டைல் உலக அளவில் டிரெண்டிங் ஆனது. ஹாலிவுட் நடிகர் முதல் பாலிவுட் நடிகர்கள் வரை அவரை புகழ்ந்து தள்ளினர். மறைந்த பாபி பட ஹீரோ ரிஷிகபூர்,நான் ஹீரோவாக நடித்த காலத்தில் நீ பிறந்திருக்கலாம்; என்று அவரை புகழ்ந்தார்.

பிரியா வாரியர் முன்னணி நடிகைகளுக்கு கடும் போட்டியாக இருப்பார் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்த்தனர் பட வாய்ப்புகளும் பல மொழிகளிலிருந்து தேடி வந்தது. ஆனால் அவர் கோடிகளில் சம்பளம் கேட்டதுடன். நிறைய கண்டிஷன்கள் போடவே வந்த வாய்ப்புகள் அதே வேகத்தில் காணாமல் போய்விட்டது.ஒரு அடார் லவ் படமும் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் அவரை கண்டு கொள்ள யாரும் இல்லை. ஒன்றிரண்டு படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்று நடித்து வருகிறார். ஆனாலும் கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டேன், முத்தம் தந்து நடிக்க மாட்டேன் என்று மறுபடியும் நிபந்தனை போடவே. பட வாய்ப்புகள் நின்றே போனது.

கொரோனா ஊரடங்கு இருக்கும் நிலையில் ஒரு படத்திலும் நடிகை அழைப்பு வரவில்லை. இதற்கிடையில் மேலும் பல இளம் நடிகைகள் என்ட்ரி தரவே கிட்டதட்ட ரசிகர்கள் பிரியா வாரியவரை மறக்கும் சூழலுக்கு வந்துவிட்டனர். இனியும் சும்மா இருந்தால் ஓரம் கட்டிவிடுவார்கள் என்று ஒரு சிலர் அட்வைஸ் சொல்லக் கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று மறைமுகமாக அறிவித்திருக்கிறார்.திடீரென்று படுகவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தி அதனைத் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து கவர்ச்சியாக நடிக்கத் தயாராக இருப்பதாக கோடிட்டுக் காட்டி இருக்கிறார். அதற்கு லைக்ஸ் குவிந்தபோதும் ஒரு சிலர் அவர் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர். சிலர் மோசமாகத் தெரிவித்திருந்த விமர்சனத்தைக் கண்டு கோபம் அடைந்தவர் அவர்களுக்குப் பதில் அளித்தார்.

அதில்,எனது சமீபத்திய பதிவைக் கண்டு வந்திருந்த ஒரு சில கருத்துக்களை என்னால் படிக்கக்கூட முடியாத அளவுக்குக் கடுமையாக இருந்தது. ஆரம்பத்தில் விமர்சிக்கும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது என்று எண்ணினேன். ஆனால் இது மிகவும் கடுமையானது. அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு மெதுவான கைதட்டலைக் கொடுக்க வேண்டும். அதாவது, அவர்கள் ஏன் இதுபோன்ற விஷயங்களை விமர்சிக்கிறார்கள் என்று யோசித்தேன் பிறகுதான் புரிந்தது, நாம் செய்வது சிலரிடம் ஒப்புதலும் பாராட்டும் கிடைக்கும், சிலருக்குப் பிடிக்காது விமர்சனம் வரும் என்று எனத் தெரிவித்திருக்கிறார்.
விமர்சனங்களைப் பொறுத்துக்கொண்டு அதற்குச் சரியான பதில் அளித்திருப்பாக அவரது ரசிகர்கள் பிரியா பிரகாஷ் வாரியருக்குக் கைதட்டல் இமோஜிகளை வெளியிட்டுப் பாராட்டி உள்ளனர்.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Cinema News