ஒதுக்குபுறமான வீடு.. கணவன் கள்ளக்காதலியுடன் உல்லாசம்..கையும் களவுமாக பிடித்த மனைவி..பிறகு நடந்தது என்ன??

wife reveals her husband illegal relationship

by Logeswari, Oct 22, 2020, 11:23 AM IST

தெலுங்கானாவில் மனைவியை ஏமாற்றி கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்ததை கண்டுபிடித்த மனைவி போலீஸில் புகார் கொடுத்து கணவனை சிறையில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பத்ராச்சலம் என்கின்ற நகரை சார்ந்தவர் சுபாஷ். இவர் அதே பகுதியில் ஆயுத படை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு சுபாஷ் தனது அத்தையின் மகளான பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களுக்கு 2 பெண் குழந்தை உள்ளது. சுபாஷ் தனக்கு பெண் குழந்தை இருப்பது பற்றி எந்த கவலையும் இல்லாமல் தனது முன்னாள் காதலியை தனியாக வீடு எடுத்து தங்கவைத்து அந்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சுபாஷின் மனைவிக்கும் தனது கணவர் மேல் சந்தேகம் ஏற்பட்டதால் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சுபாஷ் தனது காதலியுடன் உல்லாசமாக இருந்தபொழுது அதை தெரிந்து கொண்ட சுபாஷின் மனைவி போலீசாருடன் அங்கு சென்று தனது கணவனை கையும் களவுமாக பிடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இரண்டு போரையும் சரமாகி தாக்கி கையில் கிடைத்த செருப்பு, கட்டைகள் வைத்து தனது கணவரை பயங்கரமாக வெளுத்து வாங்கினார். அதே கையேடு கணவனை காவல் நிலையத்துக்கு இழுத்து சென்று கணவர் மற்றும் அந்த பெண்ணின் பெயரில் புகார் செய்துள்ளார் அந்த வீர மங்கை..

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை