11 துண்டுகளாக கிடந்த உடல் 20 ஆண்டுகளுக்கு முன் முதல் கொலை -உ.பியை அதிரவைத்த நபர்!

psycho killer arrested in uttar pradesh

by Sasitharan, Oct 30, 2020, 21:17 PM IST

உத்தரபிரதேச மாநிலம் எட்டவா என்ற மாவட்டத்தில் 11 துண்டுகளாக பெண்ணின் உடல் ஒன்று நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்தப் பெண்ணின் பெயர் புதி தேவி. இதையடுத்து கொலையாளி தேடிய போலீஸாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. இதன்பின் நடந்த விசாரணையில், 40 வயது கொண்ட சர்வேஷ் யாதவ் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சர்வேஷ் யாதவ் ஒரு சைக்கோ கொலையாளி.

இவர் கொலை செய்த புதி தேவி கணவரை இழந்தவர். இதையடுத்து தனது மாமாவை திருமணம் செய்யுமாறு, புதி தேவியை சர்வேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு புதி தேவி மறுப்பு தெரிவிக்கவே, கழுத்தை நெரித்து அவரை கொலை செய்ததோடு, உடலை 11 துண்டுகளாக வெட்டி, ஒரு வயலில் புதைத்துள்ளார். இந்தக் கொலை சர்வேஷ் யாதவ்வின் 4வது கொலை. இவர் கொலை செய்த நான்கு பேரும் பெண்கள். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணை முதன் முதலில் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவரின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை