`ஒற்றுமை சிலையையும் விட்டுவைக்காத மோசடி... 5 கோடியை அபேஸ் செய்த தனியார் ஏஜென்சி!

by Sasitharan, Dec 3, 2020, 09:28 AM IST

குஜராத்தில் கேவாடியா பகுதியில் நர்மதா ஆற்றின் கரையில் 597 அடி உயரத்திற்கு சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலை ஒற்றுமையின் சின்னம் என்று அழைக்கப்படுகிறது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சிலைப் பகுதியில் பட்டாம்பூச்சி பூங்கா, அருங்காட்சியகம் உள்பட சுற்றுலாதலங்கள் உள்ளன. மேலும், சிலையின் உட்பகுதிக்குள் லிப்ட் மூலம் மேலே சென்று நர்மதா ஆறு, மலைப்பகுதிகளை கண்டு ரசிக்கலாம். தற்போது குஜராத் வனத்துறை சார்பில் கேவாடியா பகுதியில் ஆரோக்கியவனம் என்ற பெயரில் பெரிய பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த சிலை டிக்கெட் விற்பனையில் மோசடி நடந்துள்ளது தெரியவந்திருக்கிறது. `ஒற்றுமை சிலை' என அழைக்கப்படும் இந்த சிலையை காண விற்பனை செய்யப்படும் டிக்கெட் பணத்தை வதோதராவில் உள்ள ஒரு தனியார் வங்கியில் சிலை நிர்வாகம் பெயரில் உள்ள ஒரு அக்கவுண்டில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணத்தை வாங்கி வந்து டெபாசிட் செய்யா ஒரு தனியார் ஏஜென்சியை வங்கி ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி கடந்த ஒன்றரை ஆண்டாக அந்த தனியார் ஏஜென்சிதான் டிக்கெட் வசூல் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து வந்தது. சில வாரங்களுக்கு முன் வசூல் மூலம் கிடைத்த பெரும் தொகையை தனியார் ஏஜென்சி ஊழியர்களிடம் சிலை நிர்வாகம் கொடுத்துள்ளது. ஆனால் அந்த தொகையில் ரூ.5 கோடியே 24 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்யாமல் அவர்களே வைத்துக்கொண்டுள்ளனர். இந்த மோசடி குறித்து தெரிந்துகொண்ட சிலை நிர்வாகம் வங்கியில் புகார் அளிக்க, இப்போது போலீஸ் வரை விவகாரம் சென்றுவிட்டது.

You'r reading `ஒற்றுமை சிலையையும் விட்டுவைக்காத மோசடி... 5 கோடியை அபேஸ் செய்த தனியார் ஏஜென்சி! Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை