வெற்றிகரமான நான்காம் ஆண்டில் தி சப்எடிட்டர் இணையதளம்..

by எஸ். எம். கணபதி, Dec 3, 2020, 09:28 AM IST

தமிழ் இணையதளங்களில் மிகவும் நேர்த்தியாகவும், வாசகர்களுக்குப் புரியும் எளிய நடையிலும், தரமாகச் செய்திகளை அளித்து வரும் நமது தி சப்எடிட்டர் டாட் காம், நான்காம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. அரசியல், சினிமா, தொலைக்காட்சி, தொழில்நுட்பம், வர்த்தகம், விளையாட்டு மற்றும் சமையல் குறிப்புகள் உள்பட பல்வேறு தலைப்புகளில் செய்திகளையும், படங்களையும் நடுநிலையுடன், உள்ளது உள்ளபடியே வழங்கி வருகிறது இந்த இணையதளம்.

வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வரும் இந்த தருணத்தில், அவர்களின் தேவைக்கேற்ப அரசியல் ஆய்வுகள், ஆன்மீகக் கட்டுரைகள், ஜோதிடம் உள்பட பல்வேறு விஷயங்களையும் விரைவில் வழங்கவிருக்கிறது. மேலும், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளுக்கும் முன்பாக பிரேக்கிங் நியூஸ் கொடுக்கத் தயாராகி வருகிறது.
அன்பான வாசகர்கள், தினமும் இந்த இணையதளத்திற்கு வருகை தந்து தொடர்ந்து ஆதரவு தர வேண்டுமென்று என்று ஆசிரியர் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

More India News


அண்மைய செய்திகள்