அல்ஜீரியாவில் பயங்கர விபத்து: ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி 257 பேர் பலி

Apr 11, 2018, 18:57 PM IST

அல்ஜீரியா பகுதியில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கி 257 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

வடமேற்கு ஆப்பரிக்கா நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத் தளத்தில் இருந்து லயுஷின் இல் 76 என்ற ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டது. இதில், ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகள் பயணித்தனர்.

இந்த விமானம் வடக்கு பகுதியில் உள்ள பெசார் நகரத்தை நோக்கி சென்றுக் கெண்டிருந்த விமானம் நடுவானில் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகள் சேர்ந்து 257 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை