போராட்டம் எதிரொலி: ஐபிஎல் போட்டி இனி சென்னையில் நடைபெறாது ?

Apr 11, 2018, 17:21 PM IST

சென்னையில் நேற்று நடைபெற்ற கடும் போராட்டத்திற்கு எதிரொலியாக இனி சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறாது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், ஐபிஎல் போட்டி நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று சென்னை அண்ணாசாலையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டதை அடுத்து போராட்டக்காரர்களை களைக்க தடியடி நடத்தினர். இதனால், அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது. மேலும், இது தொடர்பாக 500க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த போராட்டத்தையும் மீறி நேற்று இரவு 8 மணிக்கு ஐபிஎல் போட்டி தொடங்கியது. இதற்கிடையே, கிரிக்கெட் வீரர்களை அவர்கள் தங்கியிருந்த ஓட்டலின் பின் வாசலில் இருந்து இரண்டு பேருந்துகள் மூலம் பாதுகாப்பாக சேப்பாக்கம் மைதானத்திற்கு அழைத்து சென்றனர்.

போட்டி விறுவிறுப்பாக தொடங்கிய நிலையில், ஸ்டேடியத்திற்கு வந்திருந்த போராட்டக்காரர்கள் பலர் டார்ச் லைட் எரிய வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். சிலர் தாங்கள் அணிந்திருந்த செருப்பை வீசி எறிந்தனர். இதனால், நேற்று மிகுந்த பரபரப்புடன் ஐபிஎல் போட்டி நடைபெற்றது.

இந்நிலையில், சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த மீதமுள்ள 6 போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்றைய போட்டியின்போது ஏற்பட்ட பிரச்னைகள், வீரர்கள் பாதுகாப்பு, வருமானம் குறைவு உள்ளிட்ட அம்சங்களை கணக்கில் கொண்டு இனிவரும் போட்டிகள் சென்னையில் நடத்தப்படாது என ஐபிஎல் போட்டி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சென்னைக்கு பதிலாக, திருவனந்தபுரம் அல்லது புனே ஆகிய மைதானங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading போராட்டம் எதிரொலி: ஐபிஎல் போட்டி இனி சென்னையில் நடைபெறாது ? Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை