தொழிலதிபரை கடத்திய கும்பல் - கண்ணி வைத்த காவல்துறை!

தொழிலதிபர் கடத்தல் வழக்கு- 5 பேர் கைது

by Radha, Jun 1, 2018, 08:15 AM IST

சென்னை வடபழனி அருகே தொழிலதிபரை கடத்தி 33 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை வடபழனியை சேர்ந்த நிதிநிறுவன பங்குதாரர் மோகன் மற்றும் அவரது மாப்பிள்ளையை மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்தி சென்றது. அவர்கள் இருவரையும் சேலையூர் மப்பேட்டில் உள்ள ஒரு வீட்டில் அந்த கும்பல் அடைத்து வைத்தது. இருவரையும் உயிருடன் விடுவிக்க பணம் கேட்டு, அவர்களது குடும்பத்தை அந்த கும்பல் மிரட்டியது.

அச்சம் அடைந்த மோகன் குடும்பத்தினர் 33 லட்சம் ரூபாய் பணம், 28 சவரன் நகை ஆகியவற்றை அந்த கும்பலிடம் கொடுத்தனர். பணம் கிடைத்த சிறிது நேரத்தில், மோகன், அவரது மாப்பிள்ளை கண்களை கட்டி, மப்பேடு கிராமத்தில் அந்த கும்பல் இறக்கி விட்டு சென்றது.

இது தொடர்பாக மோகன் அளித்த புகாரின் அடிப்படையில், வடபழனி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கடத்தலில் ஈடுபட்ட கும்பல் யாரென்பது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, சீனு, நந்தா உள்பட ஐந்து பேரை வடபழனி போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும், வினோத், மணிகண்டன் ஆகிய இருவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சரவணகுமார் மற்றும் அவரது நண்பகரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தொழிலதிபரை கடத்திய கும்பல் - கண்ணி வைத்த காவல்துறை! Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை