பல கோடி மதிப்பிலான சிலைகள் திருட்டு... முக்கிய குற்றவாளி கைது!

சிலைகள் திருட்டு குற்றவாளி கைது!

by Radha, Jun 20, 2018, 16:17 PM IST

சிலை கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Thief arrested

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அருகே ராமானுஜபுரத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலின் சிவன், பார்வதி உலோக சிலைகள் கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டன.

இதுபோல வந்தவாசி அருகே சவுந்தரியபுரத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் பையூர் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் ஆகியவற்றில் இருந்து பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரின் 6 சிலைகளும் கடத்தப்பட்டன.

80 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த 8 சிலைகளையும் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படையினர் உடனடியாக மீட்டனர். இந்த கடத்தலில் தொடர்புடையவர் என்று கருதப்படும் காவாங்கரை ஜெயக்குமாரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஜெயக்குமாரை, சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான டிஎஸ்பி அழகு சுந்தரம் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் கைது செய்தனர்.

You'r reading பல கோடி மதிப்பிலான சிலைகள் திருட்டு... முக்கிய குற்றவாளி கைது! Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை