10 ஆண்டுகளாக நூதன முறையில் செக் மோசடி செய்த பலே கில்லாடி

நூதன முறையில் செக் மோசடி செய்த பலே கில்லாடி

by Radha, Jul 4, 2018, 08:54 AM IST

நூதன முறையில் செக் மோசடி செய்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்த நபரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

fraud

சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில், வங்கியில் போடப்பட்ட செக்கில் மோசடி செய்து பணத்தை கொள்ளையடித்துள்ளதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதன் அடிப்படையில் சுரேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். சுரேஷிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், வங்கிகளில் போடப்பட்ட செக்கில் மோசடி செய்து பல பேரிடம் 30 லட்சம் வரை கொள்ளையடித்தது தெரியவந்தது.

செக்கின் மூலையில் க்ராஸ் செய்யாமல் போடப்படும் செக்குகளை, வங்கி அதிகாரிகள் துணை கொண்டும், நூதன மோசடி செய்து பணத்தை எடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த விவகாரம் குறித்து, மத்திய குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. பின்னர் சுரேஷை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் போலிசார் அனுமதி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து, சுரேசிடம் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 10 வருடமாக இதே பாணியில் கொள்ளையடித்ததாக சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அரசு வங்கிகளில், குறிப்பாக பெண்களை குறிவைத்து இந்த மோசடியில் ஈடுபடுவதாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். அரசு வங்கிகளில் கண்ணாடி பெட்டிகளில் போடும் செக்குகளில், க்ராஸ் செய்யாத செக்குகளை நோட்டமிட்டு வங்கி ஊழியர் உதவி கொண்டு எடுத்து மோசடி செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேலும், வங்கி அதிகாரிகள் அடையாள அட்டை கேட்டால், செக்கில் உள்ள பெயரில் போலி அடையாள அட்டை தயாரித்து, அதை காட்டி மோசடி செய்வதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மோசடி அரசு வங்கிகள் அலட்சியத்தால்தான் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகின்றது.

You'r reading 10 ஆண்டுகளாக நூதன முறையில் செக் மோசடி செய்த பலே கில்லாடி Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை