உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் கொலம்பியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இரண்டாவது போட்டியாக கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் இடையே போட்டிகள் நடைபெற்றன.
ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளும் கோல் போட முயன்றும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் இங்கிலாந்து அணி தவறவிட்டது. இதனால், 0-0 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமனிலையில் இருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் 57வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தியது. தொடர்ந்து, 93வது நிமிடத்தில் கொலம்பிய வீரர் யெரி மினா ஒரு கோல் அடித்தார். இதன்மூலம், 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலை ஆனது.
கூடுதல் நேரத்திலும் எந்த அணியும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷ¨ட் முறை தரப்பட்டது.
இதில், முதல் மற்றும் இரண்டாவது வாய்ப்பில் இங்கிலாந்தும், கொலம்பியாவும் தலா ஒரு கோல் அடித்தன. மூன்றாவது வாய்ப்பில் கொலம்பியா அணி ஒரு கோல் அடிக்க 3&2 என்ற கோல் கணிக்கில் அணிகள் இருந்தன. நான்காவது வாய்ப்பில் இங்கிலாந்து ஒரு கோல் அடித்து 3-3 என்ற சமனிலை ஆனது.
மேலும், இறுதி வாய்ப்பில் கொலம்பியா கோல் அடிக்கவில்லை. இங்கிலாந்து அணி கோல் அடித்து 4-3 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.