8-ஆம் வகுப்பு வரை படித்த தனியார் மருத்துவமனையின் உரிமையாளர், நோயாளிக்கு,அறுவை சிகிச்சை செய்த கொடூரம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
ஷாமிலி மாவட்டத்தின் மையப்பகுதியில் ஆர்யன் மருத்துவமனை இயங்கி வருகிறது. 8-ஆம் வகுப்பு வரை படித்த இந்த மருத்துவமனையின் உரிமையாளர், நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனை செல்போனில் படம் பிடித்த நபர், சமூக வலைதளத்தில் பதவிவேற்றம் செய்துள்ளார். தற்போது, அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மருத்துவமனை உரிமையாளர் மற்றும் மருத்துவர்கள் மீது சட்டப்பிரிவு 304ன் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலர் அசோக்குமார் ஹண்டோ ஆய்வு செய்தார். முழு விசாரணை நடத்திய, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவம் படிக்காத ஒருவர் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.