தவறான சிகிச்சை... மாணவன் உயிரிழப்பு... உறவினர்கள் சாலைமறியல்

Sep 16, 2018, 07:55 AM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மருத்துவரின் தவறான சிகிச்சையால் மாணவர் உயிரிழந்ததாகக் கூறி சடலத்துடுன் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

காட்பாடியை சேர்ந்த கரண் என்ற சிறுவன் 6ஆம் வகுப்பு படித்து வருகிறான். கரணுக்கு கிட்னியில் கல் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சையளித்த மருத்துவர் அச்சுதன் திடீரென சிறுவனை பெற்றோர்களிடம் சொல்லாமல் வேறொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் தனது மருத்துவமனைக்கு வந்து, சிறுவனை காப்பாற்ற முடியவில்லை என்று கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மருத்துவரை சுற்றி வளைத்துள்ளனர். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் சினிமா பாணியில் மருத்துவர் தப்பியுள்ளார்.

இதனையடுத்து சடலத்துடன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 3 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். மருத்துவர் அச்சுதன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவனின் உறவினர்கள் வலியுறுத்தினர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் , சிறுவனின் உறவினர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து சிறுவனின் உறவினர்கள் மறியலை கைவிட்டனர். இந்நிலையில் மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

You'r reading தவறான சிகிச்சை... மாணவன் உயிரிழப்பு... உறவினர்கள் சாலைமறியல் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை