சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இன்று ரூ.85.15க்கு விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கொந்தளித்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், பொது மக்கள் அதிருப்தியடைந்து வருகின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் வலுத்து வருகிறது. இருப்பினும், பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.
சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.85 காசுகளாக இருந்தது. இந்நிலையில் இன்று 30 காசுகள் உயர்ந்து பெட்ரோல் விலை ரூ.85.15 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், டீசல் விலையும் நேற்று ஒரு லிட்டர் ரூ.77.74 காசுகளுக்கு விற்பனையானது. இது இன்று 20 காசுகள் உயர்ந்து ரூ.77.94 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடுமையாக கொந்தளித்துள்ளனர்.