`உங்க அம்மா வீட்டுல இறக்கிவிடுறேன் வா..' - மனைவியின் தலையை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற கொடூர கணவன்

மனைவியை கொடூரமாக கொலை செய்தது மட்டுமில்லாமல் அவரது தலையை டூவீலரில் கணவன் எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முனியப்பன்(வயது 28) மற்றும் அவரது மனைவி நிவேதா (19). இருவரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டதால் இருவரும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மேட்டுக்கடை அருகே வசித்து வந்தனர். முனியப்பன் அப்பகுதியில் ஓட்டுநராக பணியாற்ற நிவேதா சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே நிவேதாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிவதாக கடந்த சில மாதங்களாக சந்தேகம் அடைந்துள்ளார் முனியப்பன். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்த வண்ணம் இருந்துள்ளது. இதற்கிடையே நேற்று குடித்துவிட்டு தனது வீட்டுக்குச் சென்றுள்ளார் முனியப்பன். அப்போது இருவருக்கும் மீண்டும் சண்டை வரவே தனது தாய் வீட்டுக்கு கிளம்புவதாக கூறி கிளம்பியுள்ளார் நிவேதா.

அப்போது நிவேதாவை கர்நாடகாவில் கொண்டுவிடுவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார் முனியப்பன். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது எருக்காட்டுவலசு பகுதியில் வாகனத்தை நிறுத்திய அவர் அங்கு ஆள் நடமாட்டம் இல்லை என்பதை அறிந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நிவேதாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்தது மட்டுமில்லாமல் அவரின் கழுத்து பகுதியை தனியாக எடுத்துக்கொண்டு தனது டூவீலரில் மீண்டும் புறப்பட்டுள்ளார். தலையை வேறு எங்காவது வீசி வேண்டும் என எண்ணி அவர் கொண்டு சென்றுள்ளார். ஆனால் வேகமாக சென்ற அவரது டூ வீலர் விபத்துக்குள்ளாகவே முனியப்பன் தடுமாறி கீழே விழுந்தார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த கிராமமக்கள் தலையில்லாமல் பெண்ணின் உடல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். அதேநேரத்தில் மனைவியின் சடலத்தை விட்டுவிட்டு கால்வாயில் குதித்து தப்ப முயன்ற முனியப்பனை துரத்திப்பிடித்த கிராமத்தினர், பெருந்துறை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சந்தேகத்தின் காரணமாக காதல் மனைவியை கல்யாணம் முடிந்த 9 மாதங்களிலேயே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

முசிறி வனப்பகுதியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தால் பரபரப்பு

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

Tamil news, Latest Tamil News, Tamil News Online, Tamil Nadu Politics, Crime News, Tamil Cinema, Tamil Movies, Movie review, Sports News