பேஸ்புக்கால் வாழ்க்கையை இழந்த இளம்பெண்: டூபாக்கூர் காதலன் உள்பட 2 பேர் கைது

young lady lost her life because of Facebook

by Subramanian, Apr 25, 2019, 08:54 AM IST

நாகர்கோவிலில், பேஸ்புக் மூலம் பழகிய இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மாற்றுத்திறனாளி காதலன் மற்றும் அவனது நண்பனை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், பேஸ்புக்கில் தனது புகைப்படத்தையும், கருத்துகளையும் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். எந்த நேரமும், பேஸ்புக்கிலேயே மூழ்கிக் கிடந்த அவருக்கு ஆவரைக்குளத்தைச் சேர்ந்த ஏசுநேசன் என்பவர் பேஸ்புக் நண்பராக அறிமுகம் ஆனார்.


ஏசுநேசன் தான் மாற்றுத்திறனாளி என்ற உண்மையை அந்தப் பெண்ணிடம் மறைத்ததாக சொல்லப்படுகிறது. இருவரும் பேஸ்புக் மூலம் பழக்கத்தை வளர்த்துக் கொண்டனர். இதை அடுத்து மெல்ல மெல்ல தன்னைப் பற்றிய உண்மைகளை அந்தப் பெண்ணிடம் கூறி தனது காதலை ஏசுநேசன் வெளிப்படுத்தியுள்ளான்.

முதலில் அந்தப் பெண் மறுத்ததாகவும், ஏசுநேசனின் தொடர் வற்புறுத்தல் காரணமாக ஏற்றுக் கொண்டதாகவும் தெரிகிறது. சில நாட்களுக்கு முன், நேரில் சந்திக்க வேண்டும் எனக் கூறி அந்தப் பெண்ணை காரில் அழைத்துச் சென்றுள்ளான் ஏசுநேசன். காரை அவனது நண்பன் ஆதீஷ் என்பவன் ஓட்டியுள்ளான்.

ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகே காரை நிறுத்தி விட்டு காட்டுக்குள் அந்தப் பெண்ணை, ஏசுநேசன் கூட்டிச் சென்றுள்ளான். விபரீதம் அறியாமல் சென்ற அப்பெண்ணை வாயை துணியால் மூடி, ஏசுநேசனும், ஆதீசும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. நகைகளையும் பிடுங்கி விட்டு அப்பெண்ணை அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

வீட்டில் நகைகளைப் பற்றிக் கேட்ட போது, நடந்தவற்றைக் கூறி அப்பெண் அழவே, நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து ஏசுநேசனையும், ஆதீசையும் கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது அநியாயம்.. .சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு ரசிகர்கள் விமர்சனம் #VijayTv

You'r reading பேஸ்புக்கால் வாழ்க்கையை இழந்த இளம்பெண்: டூபாக்கூர் காதலன் உள்பட 2 பேர் கைது Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை