ட்விட்டர், ஸ்லாக் மற்றும் ஒன்நோட் ஆகியவை தங்கள் இடைமுகத்தில் டார்க் மோட் என்ற கறுப்பு பின்னணி வசதியை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தன. தற்போது முகநூல் நிறுவனத்தின் மெசஞ்ஜரிலும் டார்க் மோட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மெசஞ்ஜரை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டு தளங்களிலும் பயன்படுத்துவோருக்கு கறுப்பு பின்னணி (டார்க் மோட்) வசதி கிடைக்கும்.
கறுப்புப் பின்னணிக்கு (டார்க் மோட்) மாறும் வழிமுறை:
மெசஞ்ஜர் செயலியை திறக்கவும்
முகப்பு தோற்ற படத்தில் (ப்ரொஃபைல்) தட்டி, செட்டிங்க்ஸ் என்னும் அமைப்புக்குள் செல்லவும்
வெள்ளை பின்னணியை கறுப்பாக மாற்றுவதற்கு டார்க் மோட் பொத்தானை
கடந்த மாதமே பிறை சந்திரன் எமோஜியை உரையாடலின்போது அனுப்பி கறுப்பு பின்னணிக்கு மாறும் உத்தி மெசஞ்ஜரில் மறைமுக பயன்பாட்டுக்கு வந்து விட்டது. தற்போது அது அமைப்பு (செட்டிங்க்ஸ்) ரீதியாகவே உலக அளவில் பயன்பாட்டுக்கு தரப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக்குடன் இணைந்தே மெசஞ்ஜரையும் இயங்க வைக்க இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. அவ்வசதி வருமாயின் ஒரே இடத்தில் உரையாடுவதற்கு முடியும். டார்க் மோடை பயன்படுத்துவதன் மூலம் மின்னாற்றலின் பயன்பாடு குறையும் என்பதும் குறிப்பிடத்தது.