ஈரோடு கால்வாய்களில் ரத்த நிறத்தில் தண்ணீர்..

ஈரோட்டில் கால்வாய்களில் தண்ணீர் ரத்த நிறத்தில் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னரே அது சாய பவுடர்களால் ஏற்பட்ட கோளாறு என்று தெரியவந்ததும் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

by Balaji, Feb 12, 2021, 15:49 PM IST

ஈரோடு பெரிய சேமூர், அக்ரஹாரம் பகுதிகளில் ஓடை மற்றும் சாக்கடை கால்வாய்களில் இன்று காலை தண்ணீர் ரத்த நிறத்தில் இருந்ததால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. வெகு நேரத்துக்குப் பின்னரே சாயப் பவுடர் கலந்ததால் இந்த நிலை என்று தெரியவந்ததும் மக்கள் நிம்மதி அடைந்தனர்.இந்த கால்வாய் பகுதியில் ரசாயன சாய பவுடரை சிறு சிறு மூட்டைகளாகத் துணியில் கட்டி ஆங்காங்கே மர்ம கும்பல் வீசி சென்றுள்ளது. இதனால் பிச்சைகாரன்பள்ளம் ஓடையில் தண்ணீர் அடர் சிவப்பு நிறத்திற்கு மாறி ரத்தம் போல் பாய்ந்து உள்ளது .இந்த ஓடை நீர் காவிரி ஆற்றில் கலப்பதால் காவிரி ஆறும் மாசடையும் நிலை உருவாகி உள்ளது.

ஏற்கனவே இந்த ஓடைகள் வழியாகச் சாய, தோல் கழிவுகள் கலப்பதாகப் பொதுமக்களும், விவசாயிகளும் புகார் தெரிவித்து வந்த நிலையில், பயன்படுத்தாத சாய பாக்கெட்டுகளை மர்ம கும்பல் நீர் நிலைகளில் வீசி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆலைகழிவுகளால் ஓடை தண்ணீர் நிறம் மாறி செல்வதை மறைத்து, மக்களைத் திசை திருப்பவே மர்ம நபர்கள் இந்த நாச வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

You'r reading ஈரோடு கால்வாய்களில் ரத்த நிறத்தில் தண்ணீர்.. Originally posted on The Subeditor Tamil

More Erode News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை