பிஸி லைஃப்பில் ஃபிட்னஸ்ஸை தக்க வைப்பது எப்படி?

Tips for Healthy Living on a Busy Schedule

by SAM ASIR, Jun 11, 2019, 19:12 PM IST

'உடல் ஆரோக்கியத்திற்காக என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டால், 'அதுக்கெல்லாம் எங்கே நேரமிருக்கு?' என்பதே பெரும்பாலும் அனைவரின் பதிலாக இருக்கிறது. யாருக்கும் உடற்பயிற்சி செய்யவோ, உணவில் கவனம் செலுத்தி சாப்பிடவோ நேரமிருப்பதில்லை.
மாதம் ஆனால் சம்பளம் வருகிறது.

தினமும் வீட்டுக்கு வந்ததும் சாப்பாடு ஆர்டர் செய்துவிட்டு ரிலாக்ஸாக டி.வி. பார்த்துக் கொண்டு இருக்கலாம். ஜிம்முக்கு போவதெல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறோம். வெளியே உணவு வாங்குவதை விட, ஆரோக்கியமான உணவு பொருள்களை நாமே சமைக்கலாம். பெரிதான முயற்சி எடுக்காமல் அன்றாட வாழ்விலேயே ஆரோக்கியத்துக்கேற்ற பயிற்சிகளை செய்யலாம்.

எளிதான சமையல்

சமையலை பெரிதாகப்போட்டு குழப்பிக் கொள்ளவேண்டாம். எளிதாக சமைக்கக்கூடியவை எவை என்று பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். எல்லா காய்கறிகளையும் ஒன்றாக பயன்படுத்தி ஒரே முறையில் சமைக்கக்கூடிய உணவினை தேர்ந்தெடுக்கலாம். அப்படியானால் மளிகை பொருள்கள் மட்டுமல்ல நேரமும் குறைவாக செலவாகும். வீட்டில் சமைப்பதால் உடலுக்குக் கேடு விளைவிக்காமல் நன்மை தரக்கூடிய ஆரோக்கியமான உணவாக அமையும்.

படிகள்

முடிந்த வரை மாடியேற படிகளை பயன்படுத்துவது நல்லது. உங்கள் அலுவலகம் பத்தாவது மாடியில் இருந்தால் லிஃப்ட்டை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. இரண்டு மாடிகளுக்கு முன்பே லிஃப்டிலிருந்து இறங்கி, படிகளில் ஏறிச் செல்வதை அல்லது இறங்குவதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். காலையில் படியேறினால் வியர்த்துப் போகும். அதன்பின் அலுவலகத்தில் வேலை செய்வது வசதியாக இருக்காது. ஆகவே, மாலையில் படியை பயன்படுத்தி இறங்கலாம். வீட்டில் சென்றதும் குளித்துக்கொள்ளலாம்.

நொறுக்குத் தீனி

குறித்த நேரத்தில் சரியான உணவு பொருள்களை சாப்பிட வேண்டும். நினைத்தபோதெல்லாம் அல்லது கிடைக்கும்போதெல்லாம் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். மூன்று வேளை மட்டும் சாப்பிடுவது போதாத நிலை ஏற்பட்டால், வேளையை அதிகரித்து சாப்பிடும் அளவை குறைத்துக்கொள்ளலாம். ஒருபோதும் காலை உணவை தவிர்க்கவேண்டாம்.

தண்ணீர்

அநேகவேளைகளில் பசிப்பதினால் அல்ல; உடலில் நீர்ச்சத்து குறைவதினாலேயே நொறுக்குத் தீனிகள் குறித்த தேடல் ஏற்படுகிறது. தண்ணீருக்கு ஆற்றலை கூட்டுவதோடு செரிமானத்திற்கு உதவும் தன்மையும் உண்டு. ஆகவே, முடிந்த அளவு அதிகமாக நீர் பருகவேண்டும். ஆனாலும் வயிறு நிறைய தண்ணீர் குடித்தால் போதுமான உணவு சாப்பிடமுடியாமல் சத்துக்குறைவு ஏற்பட நேரலாம்.

அடைக்கப்பட்ட உணவு

பேக்கேஜ்ட் புட் எனப்படும் பை மற்றும் பெட்டிகளில் அடைக்கப்பட்ட உணவு பொருள்களை தவிர்க்கவேண்டும். அவற்றில் சர்க்கரை, சோடியம் மற்றும் பதப்படுத்தல் மற்றும் சுவையூட்டுவதற்காக பல பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கும். அவை உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும்.

சிறு பயிற்சி

உடற்பயிற்சி கூடத்திற்கு (ஜிம்) சென்று ஒரு மணி நேரம் செலவழித்துதான் பயிற்சி செய்ய வேண்டும் என்பதல்ல. அப்படி செய்வது நல்லது. ஆனால், அது முடியாவிட்டால், அலுவலகத்தில் இடைவேளையின்போது சிறு சிறு பயிற்சிகள் செய்யலாம். ஐந்து நிமிடம் இடைவேளையின்போதுகூட இப்படி பயிற்சிகள் செய்யலாம். சிறு பயிற்சிகளை தொடர்ந்து செய்வது நல்ல உறக்கம் வருவதற்கும் காலையில் புத்துணர்வோடு எழும்புவதற்கும் உதவும்.

More Health News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை