முடி உதிர்தலை தடுக்குமா வெங்காயம்?

How to stop hair loss with onion juice

by SAM ASIR, Aug 5, 2019, 19:07 PM IST

அந்தக் காலத்தில் பாட்டி, வெங்காயத்தை அரைத்து தலையில் பூசிக் கொள்வதை பார்த்திருப்பீர்கள். அரைத்த பச்சை வெங்காயத்தின் வாசனை உங்களுக்குப் பிடிக்காமல் முகத்தை கூட நீங்கள் சுளித்திருக்கலாம். ஆனால், முடி உதிர்வதை தடுக்கும் ஆற்றல் உண்மையில் வெங்காயத்திற்கு உள்ளது.

கூந்தல் உதிர்வை தடுக்கிறது

சல்ஃபர் என்னும் கந்தகம் புரத அமினோ அமிலங்களில் மிக முக்கியமான பொருளாகும். கெரட்டின் என்னும் புரதம் கூந்தலுக்கு வலிமையையும் ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.
வெங்காயத்திலுள்ள கந்தகம் உடலில் கொலஜன் என்னும் புரதம் உருவாவதை ஊக்கப்படுத்துகிறது. கூந்தலின் வேரை இது வலிமையாக்கி உதிர்வதை தடுக்கிறது.
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் பண்பு வெங்காயத்திற்கு உள்ளது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இரத்த ஓட்டம் நன்றாக இருந்தால் கூந்தலும் நன்றாக வளரும்.

எல்லா வகை பிரச்னைகளுக்கும் தீர்வல்ல

எல்லா வகையான முடி உதிர்தலுக்கும் வெங்காயம் தீர்வை அளிக்காது. முதுமையின் காரணமாக கூந்தல் வேர் வலுவிழந்து உதிர்வதை தடுக்கும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. ஆனால், வேறு காரணங்களால் முடி உதிர்ந்தால் வெங்காயம் உதிர்தலை தடுக்காது. வழுக்கை போன்ற இயற்கை காரணங்களால் முடி உதிர்தலை வெங்காயத்தைக் கொண்டு தடுக்க இயலாது.

எல்லோருக்கும் ஏற்றதா?

வெங்காய சாறு அநேகருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். வெங்காயத்தை அரைத்து பூசுவது உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தினால் பயன்படுத்தாதீர்கள்.
வெங்காய சாற்றுக்கு அரிக்கும் பண்பு உண்டு. எளிதாக அது சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும். அரைத்த வெங்காயத்தை தலையில் பூசிய பின்னர் தலை கன்றிப்போய் அரிப்பு ஏற்பட்டால் பயன்படுத்துவதை நிறுத்தவும்.

சில மருந்துகள் உட்கொள்ளும்போது வெங்காயத்தை பயன்படுத்தக்கூடாது. எடுத்துக்காட்டாக, அஸ்பிரின் மருந்து சாப்பிடும்போது வெங்காயத்தை அரைத்து தலையில் பூசவேண்டாம்.

பொதுவான ஆலோசனைகள்

முடி உதிர்தலை தடுப்பதற்கு யோகாசனம் செய்யலாம். தினமும் மூச்சுப்பயிற்சியாகிய பிரணாமயம் செய்தால் மன அழுத்தம் குறையும்; முடி உதிர்தல் நிற்கும். புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றை விட்டுவிடவும். தினமும் போதுமான அளவு நீர் அருந்தவும். ஆரோக்கியமான உணவு பொருளை சாப்பிட்டு செரிமான மண்டலத்தை நன்றாக பராமரிக்க வேண்டும்.

இவற்றை செய்து வந்தால் முடி உதிர்தலை தடுக்கலாம்.

You'r reading முடி உதிர்தலை தடுக்குமா வெங்காயம்? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை