விற்பனைக்கு வந்துள்ள ரியல்மீ எக்ஸ்

by SAM ASIR, Aug 5, 2019, 18:58 PM IST

அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் ரியல்மீ எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இணைய விற்பனை ஆகஸ்ட் 7ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது.

ரியல்மீ எக்ஸ் போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.53 அங்குலம் எஃப்ஹெச்டி; 19.5:9 விகிதாச்சாரம்; 1080X2340 தரம்

இயக்கவேகம்: 4 ஜிபி RAM மற்றும் 8 ஜிபி RAM

சேமிப்பளவு: 128 ஜிபி

பின்பக்க காமிரா: 48 எம்பி ஆற்றல் கொண்ட சோனி ஐஎம்எஸ்586 காமிரா மற்றும் 5 எம்பி காமிரா

முன்பக்க காமிரா: 16 எம்பி ஆற்றல் கொண்ட தற்பட (செல்ஃபி) பாப்-அப் காமிரா

பிராசஸர்: ஸ்நாப்டிராகன் 710 சிஸ்டம் ஆன் சிப்

மின்கலம்: 3,765 mAh (VOOC 3.0 வேகமான மின்னூட்டம்))

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை; மேற்புறம் கலர்ஓஎஸ் 6 ஸ்கின்

விலை: 4 ஜிபி RAM இயக்கவேகம்; 128 ஜிபி சேமிப்பளவு கொண்டது ரூ.16,999/-

8 ஜிபி RAM இயக்கவேகம்; 128 ஜிபி சேமிப்பளவு கொண்டது ரூ.19,999/-
இணையதள விற்பனை மூலம் பெற விரும்புவோர் ஆகஸ்ட் 7ம் தேதி, ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ ஆன்லைன் ஸ்டோர் மூலம் ஆர்டர் செய்யலாம்.


Leave a reply