மாதவிடாய் வலியா? இஞ்சி டீ பருகுங்கள்!

Ginger tea relieve menstrual discomfort

by SAM ASIR, Aug 28, 2019, 09:40 AM IST

கொஞ்சம் டயர்டா ஃபீல் பண்ணினா டீ குடிக்கிறோம். அதிலும் ஜிஞ்சர் டீ என்றால் கேட்கவே வேண்டாம். குடித்தவுடன் புத்துணர்வு ஏற்படும். இஞ்சி தேநீர் அருந்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மன அழுத்தத்தை விரட்டும்

இஞ்சி டீயின் நறுமணம் நம் மனதுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. மன அழுத்தம் ஏற்படும்போது நம் உடல் சில வேதிப்பொருள்களை வெளியிடுகிறது. இஞ்சி டீ பருகினால் இயல்பான இளைப்பாறுதல் மனதுக்குக் கிடைக்கிறது. நம் மனம் உற்சாகம் பெறுகிறது.

அழற்சியை குறைக்கும்

உடலில் ஏற்படும் அழற்சியை குணமாக்கும் தன்மை இஞ்சிக்கு உள்ளது. தசை மற்றும் மூட்டுகள் அல்லது உடலின் வேறு பகுதிகளில் அழற்சி ஏற்பட்டால், இஞ்சி தேநீர் அவற்றை குணமாக்குகிறது.

சுவாச கோளாறுகளை போக்கும்

நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை இஞ்சி டீக்கு உண்டு. தினமும் இஞ்சி தேநீர் பருகி வந்தால் நோய் தொற்று ஏற்படாமல் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

இரத்த ஓட்டத்தை தூண்டும்

இஞ்சியிலுள்ள வைட்டமின்கள், தாதுகள் மற்றும் அமினோ அமிலங்கள் இரத்த ஓட்டத்தை தூண்டக்கூடியன. இதன் காரணமாக இதயநோய் வரக்கூடிய வாய்ப்பு குறைகிறது.

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்

உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்தால் எல்லா உடல் நல பாதிப்புகளும் வரத்தொடங்கும். இஞ்சி டீ, நம் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. அதன் காரணமாக, பல்வேறு நோய்களின் பாதிப்பிலிருந்து நாம் காக்கப்படுகிறோம்.

கலோரியை செலவழிக்கிறது

உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறீர்களா? இஞ்சி டீ பருகினால் உடல் எடை குறையும். இஞ்சி தேநீர் அருந்தினால், சாப்பாட்டு வேளைகளுக்கு இடையே தின்பண்டங்கள், நொறுக்குத் தீனிகள் சாப்பிட வேண்டிய தேடல் இருக்காது. ஆகவே, இஞ்சி டீ பருகுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்

பெண்கள், மாதந்தோறும் வரும் மாதவிடாய் வயிற்றுவலியினால் அவதிப்பட நேரிட்டால், இஞ்சி தேநீர் அருந்தலாம். ஒரு குவளை இஞ்சி தேநீரில் சிறிதளவு தேன் கலந்து பருகினால் மாதவிடாய் வயிற்று வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். வயிற்று தசைகள் இளக்கம் பெறும். இஞ்சி டீயில் துண்டு ஒன்றை நனைத்து அதை அடிவயிற்றில் போட்டாலும் நல்ல குணம் தெரியும்.

Links:-

இவற்றை செய்தால் எப்போதும் ஆரோக்கியம்தான்!

You'r reading மாதவிடாய் வலியா? இஞ்சி டீ பருகுங்கள்! Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை