சரும வறட்சியை போக்கும் மருதாணி..

Advertisement

மருதாணி இலை கிருமி நாசினி. கண்ணுக்குப் புலப்படாத பல கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.

மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். மருதாணியின் வேர்ப் பட்டையை அரைத்து காலில் ஆணி, புண்கள் உள்ள இடத்தில் தடவினால் புண்கள் குணமாகும்.

வீக்கத்தை கட்டுப்படுத்த அதனை அழர்ஜி நீக்கி பொருளாகவும் பயன்படுத்தலாம். அதன் இலைகளை அரைத்து வழுதாக மாற்றி வீங்கிய பகுதியில் தடவி, அது காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின் அதனை கழுவி விடுங்கள். வீக்கம் முதுவாக வற்ற ஆரம்பிக்கும். பேஸ்ட் வடிவில் இருக்கும் மருதாணி இலைகளை உடல் சூட்டை தணிக்கவும் பயன்படுத்தலாம். இரவு தூங்கும் போது மருதாணி பேஸ்டை பாதத்தில் தடவினால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

அனைத்து வகை தலைமுடி பிரச்சனைகளுக்கும் பவுடர் அல்லது பேஸ்ட் வடிவில் உள்ள மருதானை இலைகளை பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை இந்த பேஸ்டை தலை முடியில் தடவினால் பொடுகு குறைந்து, தலைமுடியை மென்மையாக்கி, பளபளப்பை உண்டாக்கும். மேலும் நரை முடியை மறைப்பதற்காகவும் பயன்படுத்தலாம். மருதாணி இலைகள் உங்கள் முடிகளை சரி செய்து மீண்டும் பொலிவை பெறச் செய்யும்.

தீக்காயங்களுக்கு மருதாணி இலைகள் பெரிதும் உதவி புரியும். மருதாணியில் குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை உள்ளது. அதனால் மருதாணி இலைகளை தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வலி வெகுவாக குறையும். அதனால் தீக்காயங்களுக்கு மருதாணி இலைகளை மருந்தாக பயன்படுத்தலாம்.

குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மையுள்ள மருதாணியை தலை வலி நிவாரணியாகவும் பயன்படுத்தலாம். மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர;த்து அரைத்து பூசி வரவிரைவில் கருந்தேமல் மறையும்.

உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள், கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும்.

சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்துவிடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

தோல் அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு இந்த இலையை சாத்த்துடன் இரவு ஊறப் போட்டுக் காலையில் வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும்.

இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம். மருதாணி இலையை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச் சாறு, தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய் பொடி ஆகியவற்றை ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீகைக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்..

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?
/body>