நாவூறும் மாவடு ஊறுகாய்..

Mar 2, 2018, 15:24 PM IST

நாவூறும் மாவடு ஊறுகாய் எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..

சமைக்க தேவையானவை

 வெந்தயத்தூள் – அரை டீஸ்பூன், விளக்கெண்ணெய், உப்பு – தேவையான அளவு. மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், மாவடு – ஒரு கிலோ மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், கடுகுத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்.

உணவு செய்முறை

முதலில் மாவடுவை நன்றாகக் கழுவி, தண்ணீர் இல்லாமல் துடைத்து துணியில் பரப்பி 2 மணி நேரம் காய விடவும். ஊறுகாய் ஜாடியில் மாவடுக்களைப் போட்டு, விளக்கெண்ணெய் விட்டுக் குலுக்கவும்.

பிறகு, கல் உப்பு சேர்த்து மீண்டும் நன்கு குலுக்கவும். இதேபோல் நான்கு நாட்களுக்குத் திரும்பத் திரும்பக் குலுக்கவும். அப்போது மாங்காயுடன் உப்பு சேர்வதால், ஜாடிக்குள் நிறைய தண்ணீர் பிரிந்து வந்திருக்கும்.

ஜாடியில் உள்ள மாவடுக்களை வெளியே எடுத்து வேறொரு ஜாடியில் போடவும். மாவடு ஊறிய ஜாடியிலிருக்கும் தண்ணீரை வடிகட்ட வேண்டும்.

இன்னொரு ஜாடியில் உள்ள மாவடு உடன் கடுகுத்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வடிகட்டி வைத்துள்ள உப்பு நீரையும் விட்டு நன்கு குலுக்கி வைத்து விட்டால் மாவடு ஊறுகாய் தயார்.

You'r reading நாவூறும் மாவடு ஊறுகாய்.. Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை