மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி

how to make varagu semiya cheese balls in tamil

by Logeswari, Oct 21, 2020, 19:41 PM IST

தமிழகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை காலம் ஆரம்பித்துவிட்டது. மழையில் சூடாக சாப்பிடவும், குழந்தைகளை கவரும் வகையிலும் வரகு சேமியா சீஸ் பால்ஸை செய்வது எப்படி என்பது பார்ப்போம்..

தேவையான பொருள்கள்:-
வரகு சேமியா - 100 கிராம்
மைதா மாவு - 4ஸ்பூன்
சோள மாவு - 50 கிராம்
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
உருளைக்கிழங்கு - 1
எண்ணெய் - தேவையான அளவு
துருவிய சீஸ் - 1 கப்


செய்முறை:-
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரம் எடுத்து அதில் சீஸ், மசித்த உருளைக்கிழங்கு, தனியாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், வெங்காயம் போன்றவற்றை சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

ஒரு பௌலில் மைதா மற்றும் சோள மாவுவை தேவையான தண்ணீரில் கலந்து கொண்டு தனியாக வைத்துவிடவும். வரகு சேமியாவை பொடியாக்கி கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்த பிறகு உருட்டி வைத்த பாலை எடுத்து மாவில் முக்கி பிறகு வரகு சேமியாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு வறுக்க வேண்டும்.

பொன்னிறம் ஆகும் வரை வேக விட்டு பிறகு எடுத்து சூடாக பரிமாறுங்கள். வரகு சேமியா சீஸ் பால்ஸ் உடன் தக்காளி சாஸ் தொட்டு சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்..

More Ruchi corner News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை