தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..

by Logeswari, Oct 29, 2020, 19:20 PM IST

இப்பொழுது இருக்கும் கொரோனா காலகட்டத்தில் உயிரை பாதுகாப்பதற்கு ஒரே ஒரு வழி ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மட்டுமே. நாம் தினமும் சாப்பிடும் உணவு முறையை சரியாக கையாண்டால் எந்த நோயில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.. அந்த வகையில் தனியா சட்னியில் அளவு கடந்த சத்துக்கள் உள்ளது. இது இட்லி, தோசைக்கு டேஸ்ட்டாக இருக்கும். தனியாவை வைத்து எப்படி சுவையான சட்னி செய்வது என்பதை பார்ப்போம்..

தேவையான பொருள்கள்:-
தனியா -1/2 கப்
மிளகாய் வற்றல் -10
பூண்டு -2 பல்
புளி-சிறிதளவு
கடுகு- 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1/4 ஸ்பூன்
தேங்காய் துருவல் -1/4 கப்
கறிவேப்பிலை -தேவையான அளவு

செய்முறை:-
முதலில் அடுப்பில் வாணலியை வைத்து அதில் 1/2 கப் தனியா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் போன்றவற்றை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

பின்னர் மிக்சியில் வதக்கிய கலவையுடன், வறுத்த தனியா, உப்பு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். கடைசியாக வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து தாளித்து கொள்ளவும். பிறகு மிக்சியில் அரைத்த கலவையை சேர்த்து ஒரு கொதி விட வேண்டும்.

நன்கு பச்சை வாசனை போன பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். கடைசியில் கொத்தமல்லி சேர்த்து சூடான இட்லி அல்லது தோசைக்கு தனியா சட்னியை வைத்து பரிமாறுங்கள்..

More Ruchi corner News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை