கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..

by Logeswari, Sep 21, 2020, 19:35 PM IST

நாம் எல்லாரும் சுவையான கேசரி, கொழுக்கட்டை மோதகம் ஆகியவை சாப்பிட்டு இருப்போம்.ஆனால் கேசரியில் மோதகம் என்பது புதிய உணவு வகையாக தான் இருக்கும்.சரி வாங்க சூடான,சுவையான கேசரி மோதகத்தை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.இந்த உணவு குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருள்கள்:-

அரிசி மாவு-200 கிராம்

ரவை-100 கிராம்

தண்ணீர்-150 மில்லி லிட்டர்

உப்பு-தேவையான அளவு

நெய்-30 கிராம்

தேங்காய்-150 கிராம்

வெல்லம்-150 கிராம்

ஏலக்காய பொடி-1 ஸ்பூன்

முந்திரி-தேவையான அளவு

உலர்ந்த திராட்சை-தேவையான அளவு

குங்குமம் பூ-சிறிது

செய்முறை:-

அடுப்பில் கடாயை வைத்து அதில் ரவையை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.வறுத்த பின்னர் தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் அரிசி மாவு,உப்பு, குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

கிளறிய மாவை ஒரு ஈரத்துணியில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.ஒரு கடாயில் நெய்,அதில் முந்திரி,உலர்ந்த திராட்சை, வெல்லம்,துருவிய தேங்காய்,வறுத்த ரவை ஆகியவை சேர்த்து கிளறவும்.

பின்பு ஊற வைத்த மாவை கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.பிசைந்த மாவை தட்டையாக வைத்து அதில் கேசரியை வைத்து விருப்பப்பட்ட வடிவத்தில் செய்து கொள்ள வேண்டும்.

கடைசியில் இட்லி பாத்திரத்தில் மோதகத்தை வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.சூடான..சுவையான.. கேசரி மோதகம் ரெடி....Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Ruchi corner News

அதிகம் படித்தவை