முடி உதிராமல் அடர்த்தியாக வளர உதவும் பொன்னாங்கன்னி எண்ணெய்.. உடனடி தீர்வை பெறலாம்..

how to make Dwarf Copperleaf oil in tamil

by Logeswari, Oct 21, 2020, 19:44 PM IST

பெண்களுக்கு அழகு அவர்களின் கூந்தல் தான். ஆனால் தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு முடி அதிகமாக உதிர்கிறது. இதனை சரி செய்ய பெண்கள் நிறைய செயற்கை ரீதியான பொருள்களை பயன்படுத்தி இருக்கும் முடியையும் கெடுத்து கொள்கிறார்கள். அந்த காலத்தில் வாழ்ந்த பெண்கள் இயற்கை பொருள்களை வைத்து தான் அடர்த்தியான தலை முடியை பெற்றனர். அந்த வகையில் பொன்னாங்கன்னி கீரையில் தயாராகும் எண்ணெய் பயன்படுத்துவதால் மூடி அடர்த்தியாகவும், கருகருன்னும் வளரும். இந்த எண்ணெய் தேய்ப்பதால் கண்களும் குளிர்ச்சி அடையும். சரி வாங்க பொன்னாங்கன்னி எண்ணெயை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்..

தேவையான பொருள்கள்:-
பொன்னாங்கண்ணி கீரை - 1 கட்டு
நெல்லிக்காய் - 10
நல்லெண்ணெய் - 250 மில்லி
விளக்கெண்ணெய் - 50 கிராம்
தேங்காயெண்ணெய் - 50 மில்லி
மிளகு - 10 கிராம்

செய்முறை:-
முதலில் கீரையை நன்றாக அலசி எடுத்து கொள்ளவும். பிறகு நெல்லிக்காயில் உள்ள கொட்டையை எடுத்து விட்டு சதையை மட்டும் எடுத்து கொள்ளவும். கீரை மற்றும் நெல்லிக்காய் இரண்டையும் மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ள வேண்டும்.

அடுத்து அரைத்த கலவையை பிழிந்து சாறை மற்றும் தனியாக எடுக்க வேண்டும். அந்த சாறை வெயிலில் ஒரு 4 மணி நேரம் காய வைக்கவும்.பின்னர் சாறை எண்ணையுடன் கலந்து கொள்ளவும்.

வாணலியில் அந்த எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். சிறிய நேரம் கழித்த பிறகு எண்ணெய் மட்டும் தெளிந்து மேலே வரும். அதனை தனியாக எடுத்து ஜாரில் ஊற்றி வைத்து கொள்ள வேண்டும்.

இதனை வாரத்தில் மூன்று முதல் நான்கு முறை தேய்த்து தலை குளித்து வந்தால் மூடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்..

You'r reading முடி உதிராமல் அடர்த்தியாக வளர உதவும் பொன்னாங்கன்னி எண்ணெய்.. உடனடி தீர்வை பெறலாம்.. Originally posted on The Subeditor Tamil

More Aval News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை