லிப்ஸ்டிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?? வாங்க பார்க்கலாம்..

by Logeswari, Jan 18, 2021, 21:18 PM IST

ஒவ்வொரு பெண்ணும் தங்களை அழகு படுத்தி கொள்ள மிகுந்த ஆர்வம் செலுத்துவார்கள். தன்னை மற்றவர்கள் முன் அழகாக காண்பிக்க எண்ணுவார்கள். முக்கியமாக ஆண்களின் முன் அம்சமாக திகழ ஆசைப்படுவார்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் பெண்களை அழகுபடுத்தும் அதீத சாதன பொருட்கள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. என்னதான் முகத்தை அழகு செய்தாலும் உதட்டில் சரியான வண்ணம் தேர்வு செய்து லிப்ஸ்டிக் இட்டால் மட்டுமே முகம் பொலிவு அடையும். நீங்களே கண்டுபிடித்து இருக்கலாம் ஆமாங்க, நான் உதட்டுச்சாயம் பற்றி தான் கூறுகிறேன். ஏனென்றால் மேக்கப் அழகாக செய்துவிட்டு முகத்திற்கு சம்மந்தம் இல்லாத லிப்ஸ்டிக் அணிவதால் மேக்கப்க்குரிய அழகை கெடுத்துவிடும். வண்ணத்தை தேர்வுசெய்யும் முன் நம் சருமத்தின் நிறத்தை கண்டறிவது அவசியம்.சருமத்தின் நிறங்கள் 5 வகைகளாகப் பிரிக்கலாம்.

பால் நிற வெள்ளை சருமம், வெள்ளை சருமம், நடுத்தர நிற சருமம், பழுப்பு நிற சருமம் மற்றும் கருமை நிற சருமம் ஆகும். பால் வெள்ளை மற்றும் வெள்ளை நிற சருமம் கொண்டவர்கள் பிங்க், கோரல், பீச், நியூடூ மற்றும் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யலாம். நடுத்தர நிற சருமம் கொண்டவர்கள் ரோஸ், பெர்ரி, செர்ரி சிவப்பு, மற்றும் மெவ் நிற லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யும் போது மிக அழகாகக் காட்சியளிப்பார்கள். பழுப்பு நிற சருமம் கொண்டவர்கள் கோரல், டீப் பிங்க், பிரைட் ரெட் போன்ற வண்ணங்களைத் தேர்வு செய்யலாம். ஆனால் பிரவுன் மற்றும் வைல்ட் போன்ற வண்ணங்களைத் தவிர்க்கலாம். கருமை நிறம் கொண்டவர்கள் பிளம், கேரமல், ஒயின் போன்ற வண்ணங்களைத் தேர்வு செய்யலாம்.

உதட்டின் வடிவத்தை பற்றி பார்ப்போமா?
உங்கள் உதடுகளின் வடிவம் சற்று கனமாக இருந்தால் அதற்குரிய லிப்ஸ்டிக் அணியவேண்டியது அவசியம். அதாவது உங்களின் மேல் உதடு கனமாக இருந்தால் மேல் உதட்டில் சற்று பிரகாசமான நிறத்தில் உதட்டு சாயம் இருக்க வேண்டும். கீழ் உதட்டில் அதே நிறமுள்ள வண்ணத்தில் சற்று இருண்டு காணவேண்டும். இரண்டு உதடுகளும் சமநிலையில் இருந்தால் பென்சிலில் உதட்டின் வடிவத்தை வரைந்து கொண்டு உதட்டு சாயம் இட வேண்டும். இக்குறிப்புகளை பயன்படுத்தி உதட்டின் வடிவத்தை முன்னிலைப்படுத்தி சருமத்திற்கு ஏற்ற உதட்டு சாயத்தை இட்டு அழகில் பொலிவு அடையுங்கள்.

You'r reading லிப்ஸ்டிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?? வாங்க பார்க்கலாம்.. Originally posted on The Subeditor Tamil

More Aval News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை