முடி உதிர்வை தடுக்க ஒரு இன்ஸ்டன்ட் டிப்ஸ்.. இப்படி செஞ்சு பாருங்க அசந்துடுவிங்க..!

by Logeswari, Feb 2, 2021, 18:06 PM IST

பெண்களுக்கு இருக்கும் முக்கிய சிக்கலே தங்களது தலை முடிகளை சரியாக பராமரிக்க வேண்டும் என்பதே. நீளமாக முடி வளர்த்தால் அதனை பராமரிக்க முடியாது என்ற காரணத்தினால் சில பெண்கள் தங்கள் முடிகளை வெட்டி கொள்கின்றனர். முடி உதிர்வு, பொடுகு, இளநரை போன்ற பிரச்சனைகள் பெண்களுக்கு வந்து கொண்டே இருக்கும் என்பதால் இதனை எப்படி சரி செய்வது தெரியாமல் கெமிக்கல் கலந்த ஷாம்புவை பயன்படுத்தி மேலும் பெரிய சிக்கலில் மாட்டி கொள்வார்கள். இந்த மாதிரி பிரச்சனைகளை நீங்களும் அனுபவிக்கிறீர்களா?? கவலை வேண்டாம்..! முடி உதிர்வதற்கு சூப்பரான கைவசம் ஒன்றுள்ளது. இதனை சமையலுக்கு பயன்படுத்தினால் உடலுக்கு நல்லது அதுவே தலை முடிக்கு பயன்படுத்தினால் முடியும் கொட்டாது. எங்கே திருப்பினாலும் மாசு படிந்த உலகத்தில் வாழ்வதால் ஆண்களும் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளனர். சரி வாங்க இதனை எப்படி பயன்படுத்துவது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
வெந்தயம்- தேவையான அளவு
விளக்கெண்ணெய் -1 ஸ்பூன்
வைட்டமின் இ கேப்ஸுல் - 2

செய்முறை :-
முதலில் தலைமுடிக்கு தேவையான வெந்தயத்தை 6 மணி முதல் 8 மணி நேரம் உறவைத்துக்கொள்ளவும். பிறகு மிக்சியில் வெந்தயம், விளக்கெண்ணெய், வைட்டமின் இ கேப்ஸுல் ஆகியவற்றை சேர்த்து வழு வழுப்பாக அரைத்து கொள்ளவும். அரைத்த கலவையை தலை முழுவதும் தேய்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

காலையில் எழுந்தவுடன் தலை குளித்தால் குளிர்ச்சியாக இருக்கும். இதனை வாரத்தில் 2 முறை செய்து வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும். இரவு நேரங்களில் இது போன்ற குளிர்ச்சி நிரம்பிய பொருள்களை தலைக்கு தேய்த்தால் சிலருக்கு ஒத்துக்காது. அவர்கள் காலையில் தேய்த்து கொண்டு ஒரு 2 மணி நேரம் ஊறவைத்து குளித்தால் போதுமானது.

பயன்கள்:-
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி என்பதால் முடியை சூட்டில் இருந்து பாதுகாத்து முடி உதிராமல் இருக்க உதவுகிறது.

You'r reading முடி உதிர்வை தடுக்க ஒரு இன்ஸ்டன்ட் டிப்ஸ்.. இப்படி செஞ்சு பாருங்க அசந்துடுவிங்க..! Originally posted on The Subeditor Tamil

More Aval News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை