முகம் 20 வயது போல மின்ன வேண்டுமா.. ஆரஞ்சு பவுடர் தான் பெஸ்ட்.. ஆண்களும் பயன்படுத்தலாம்..

by Logeswari, Jan 18, 2021, 19:25 PM IST

மனிதர்கள் 30 வயது கடந்தவுடன் முகத்தில் சுருக்கம் தாண்டவம் ஆட தொடங்கி விடும். இது ஆண்கள், பெண்கள் என இரு பாலினருக்கும் வருகின்ற முக்கிய ஒன்றாகும். எது விட்டாலும் சுருக்கம் நம்மை விடாது. சருமத்தின் சுருக்கத்தை நீக்கி என்றும் இளமை ததும்ப வாழ வேண்டுமா?? அப்போ ஆரஞ்சு பவுடர் பயன்படுத்துங்கள். ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி, கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனை தினமும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேன்மை அடையும். ஆரஞ்சு பழத்தை காட்டிலும் அதனின் மேல் உள்ள தோள்களில் சத்து அதிகம். தோள்களில் முகத்தை பொலிவு அடைய கூடிய சத்து அதிகம் உள்ளது. சரி வாங்க ஆரஞ்சு பொடி செய்வது குறித்தும் அதனை எப்படி, எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் பார்க்கலாம்.

உங்கள் சருமம் பொலிவாக இருந்தாலும் மேலும் பொலிவாக்க ஆரஞ்சு பவுடர் உதவும். அதே சமையம் முகம் கருமையாக இருந்தாலும் ஆரஞ்சு பவுடர் மட்டுமே முகத்தை பள பளப்பாக்கும். முதலில் ஆரஞ்சு பழ தோலை வெயில் நன்றாக காய வைத்து கொள்ளவும். காய்ந்த தோலை மிக்சியில் அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியினை வைத்து வீட்டிலே பேஸ் மாஸ்க் போடலாம்..

தேவையான பொருள்கள்:-
ஆரஞ்சு பவுடர் - 2 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

செய்முறை:-
ஒரு கப்பில் முகத்திற்கு தேவையான ஆரஞ்சு பவுடரை எடுத்து கொள்ளவும். பிறகு அதில் தேன்,எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த மாஸ்க் அணிவதற்கு முன்பு முகத்தை தூய நீரால் கழுவி கொள்ளவும். சிலருக்கு முகம் மட்டும் பொலிவாக இருக்கும். ஆனால் கழுத்து கருகருன்னு கருப்பாக இருக்கும்.

இதனை தவிர்க்க ஆரஞ்சு பேஸ் மாஸ்க்கை முகம் மற்றும் கழுத்திற்கு போட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் முகத்தை கழுவினால் முகம் பொலிவடையும். இதனின் பெஸ்ட் ரிசல்ட்க்கு வாரத்திற்கு இரண்டு முறை இந்த மாஸ்க்கை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும்.

You'r reading முகம் 20 வயது போல மின்ன வேண்டுமா.. ஆரஞ்சு பவுடர் தான் பெஸ்ட்.. ஆண்களும் பயன்படுத்தலாம்.. Originally posted on The Subeditor Tamil

More Aval News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை