அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது?? நீங்களே சொல்லுங்கள்

by Logeswari, Feb 15, 2021, 19:42 PM IST

பெண்கள் அழகுக்காக எதையும் செய்வார்கள். அது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் சரி அதை முதலில் வாங்கிட்டு தான் மறு வேலையை பார்ப்பார்கள். அதுவும் சுத்தமான முகத்தை பெற வேண்டும் என்பது பல பெண்களின் கனவு ஆகும்.. அப்படிப்பட்ட பெண்களுக்கு காசு எதுவும் செலவு செய்யாமல் வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெயை வைத்து மட்டும் முகத்தை பொலிவு செய்யும் சில அழகு குறிப்புகளை காணலாம். தேங்காய் எண்ணெயை தலை முதல் பாதம் வரை பயன்படுத்துவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் தெரியாத இரண்டு சிறப்பம்சங்களை பார்க்கலாம்..

இதில் கிருமி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு போன்ற கிருமிகளை அழிக்கும் திறமை தேங்காய் எண்ணெக்கு உண்டு. இதனால் சீக்கிரமாக உடலை குறைக்கலாம்,சர்க்கரை நோயில் இருந்து விடுதலை, பற்களை உறுதி செய்தல், சாப்பிட்ட உணவை சரியான நேரத்தில் செரிமானம் செய்தல் போன்ற ஆரோக்கிய குணம் தேங்காய் எண்ணெயில் உண்டு. அடுப்பில் வாணலியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்கி கொள்ளவும். சூடான எண்ணெயில் சிறிதளவு பேக்கிங் சோடாவை சேர்த்து சூடாக்கினால் இயற்கை மிகுந்த பேஸ் வாஷ் ரெடி.. இதனை தினமும் காலையில் ஒரு முறையாகவும் மாலையில் ஒரு முறையாகவும் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் முகம் மிகுந்த பொலிவு அடையும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. குளிர் காலத்தில் உதடு வறட்சி அடையும்.அப்பொழுது ஏதாவது ஈரப்பதம் நிறைந்த பொருளை பயன்படுத்தினால் உதடு மென்மையாக இருக்கும். இதற்கு கெமிக்கல் உள்ள பொருளை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையால் தயாரான பொருளை பயன்படுத்துவது மேன்மையானது. இதனால் தேங்காய் எண்ணெயை உதடு வறட்சி அடையும் பொழுது தடவி வந்தால் உதடு சிவப்பாகவும், மென்மையாகவும் இருக்கும். செயற்கை நிறைந்த பொருள்களை கைவிடுங்கள். இயற்கை நிறைந்த பொருள்களை கரம் பிடியுங்கள்.

You'r reading அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது?? நீங்களே சொல்லுங்கள் Originally posted on The Subeditor Tamil

More Aval News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை