தினமும் காலை கதகதப்பான வெந்நீர் அருந்துவதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அது மட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்க வழிவகுக்கிறது. காலை வெந்நீர் குடித்து நாளை தொடங்கினால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க செய்கிறது. இதனை பருகுவதால் நமக்கு தெரியாமல் பல நன்மைகள் மறைந்துள்ளது. தினமும் 2 கிளாஸ் வெந்நீர் அருந்திவிட்டு உடற்பயிற்சி செய்தால் உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைக்க உதவுகிறது..மேலும் வெந்நீரில் உள்ள நன்மைகள் பற்றி பார்க்கலாம்..
அனைவரும் அனுபவிக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று செரிமானம். ஏதாவது ஒரு நாள் அதிகமாக சாப்பிட்டுவிட்டு செரிமானம் ஆகாமல் நடந்து கொண்டிருப்போம். இதற்கு பயப்பட வேண்டாம் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரை குடித்தால் பத்தே நிமிடத்தில் செரிமானம் ஆகிவிடும். அசைவம் சாப்பிடுவதால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேரும். இதனை வெந்நீரால் ஈசியாக கரைத்து விடலாம். மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் வெறும் வெந்நீரில் குணப்படுத்திவிடலாம். வெந்நீரின் முக்கிய பங்கு உடல் எடையை குறைத்தல்.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் எப்பொழுதும் வெந்நீர் தான் குடிக்க வேண்டும்.
அதுவும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5 லிட்டர் நீரையாவது குடிக்க வேண்டும்.உடனடி தீர்வுக்கு வெந்நீரில் எலுமிச்சை சாறை பிழிந்தி குடித்தால் உடல் எடை வேகமாக குறையும்.மிகவும் சூடாக நீரை அருந்தினால் உணவு குழாயை சேதப்படுத்திவிடும். ஆதலால் வெது வெதுப்பாக குடிக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். பொலிவான முகம்.. சூடான நீர் குடிப்பதால் முகத்தில் சேருகின்ற அழுக்கு, தூசி ஆகியவற்றை போக்க உதவுகிறது. முகத்தில் இருக்கின்ற தேவையான ஓட்டைகளை மறைக்கிறது.இதனால் பருக்கள்.கரும்புள்ளிகள் ஆகியவையே அறவே நீக்குகிறது.ஆகமொத்தம் தலையில் இருந்து பாதம் வரை வெந்நீர் குடிப்பதால் பல நன்மைகள் உண்டாக்குகிறது..