துணை அதிபர் புகைப்படம் பயன்படுத்த வேண்டாம்: மீனா ஹாரிஸ்க்கு வெள்ளை மாளிகை அறிவுரை!

by Sasitharan, Feb 15, 2021, 19:35 PM IST

கமலா ஹாரிஸ் பெயரை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மீனா ஹாரிஸ்க்கு வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அணி வெற்றிபெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். இதனைபோல், துணை அதிபராக இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவி வகித்து வருகிறார்.

இதற்கிடையே, கமலா ஹாரிஸின் சகோதரி மகளான மீனா ஹாரிஸ், ஃபெனோமினல் என்ற பெண்களுக்கான ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் ஆடைகள், புத்தகங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மீனா ஹாரிஸ் தனது ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தை பிரபலமாக்கும் வகையில், அத்தையான கமலா ஹாரிஸின் பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி வருவதாக வெள்ளை மாளிகைக்கு புகார்கள் வந்துள்ளது. சமீபத்தில் Vice President Aunty என்ற வாசகங்களுடன் பிரிண்ட் செய்யப்பட்ட ஸ்வெட்ஷர்ட் அதிகம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையின் சட்டக் குழு வெளியிட்ட அறிக்கையில், வணிகத்தையோ, சமூக வலைத்தள பக்கங்களையோ பிரபலமாக்கும் முயற்சியில், அமெரிக்க துணை அதிபரின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என்று மீனா ஹாரிசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மீனா ஹாரிஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பாக அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார்.

சமீபத்தில், டெல்லியில் போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக மீனா ஹாரிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மகள் என்பதால், மீனா ஹாரிஸ் பதிவிடும் கருத்துகள் துணை அதிபரின் ஆதரவு பெற்றவை என்ற முன்முடிவுக்கு பார்வையாளர்கள் வரக்கூடும் என்பதால் சமூக வலைதளப் பதிவுகளைப் கவனமாக பகிருமாறு மீனா ஹாரிஸ்க்கு அறிவுரை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

You'r reading துணை அதிபர் புகைப்படம் பயன்படுத்த வேண்டாம்: மீனா ஹாரிஸ்க்கு வெள்ளை மாளிகை அறிவுரை! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை