அடிமையாக வாழ விருப்பமில்லை.. மோடி படத்துடன் போராடிய பாகிஸ்தான் சிந்தி மக்கள் பேரணி!

by Sasitharan, Jan 18, 2021, 18:56 PM IST

பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் புகைப்படத்துடன் பாகிஸ்தானின் சிந்து மாகாண மக்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 'சிந்தி' என அழைக்கப்படும் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கை 'சிந்துதேஷ்' தனிநாடு. சிந்து என்பது சிந்து சமவெளி நாகரீகத்தின், வேத மதத்தின் பிறப்பிடமாக பாவிக்கப்படுகிறது. இந்த சிந்து மாகாணத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியிருந்தனர். தொடர்ந்து, கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைபோது சிந்து மாகாணத்தை ஆங்கிலேயர்கள் இஸ்லாமியர்களிடம் ஒப்படைத்தனர்.

இருப்பினும் 1947-ம் ஆண்டு முதல் முதலே சிந்துதேஷ் தனிநாடு கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது. சிந்து மாகாணம், பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தங்கள் பகுதியை பாகிஸ்தானில் இருந்து பிரித்து தனி நாடாக சிந்துதேஷ் ஆக மாற்ற வேண்டும் என்று சிந்தி மக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், தனி சிந்துதேஷ் கேட்டு சிந்து மாகாணத் தலைவர் ஜிஎம் சையது, பீர் முகமது அலி ரஷ்டி ஆகியோரது தலைமையில் 1967-ம் ஆண்டு முதல் முறையாக போராட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஜிஎம் சையதுவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் கோரி சிந்ததேஷ் போராட்டக்காரர்கள், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அடங்கிய படம் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் ஈடுபட்டனர். பேரணியில் ஒருவர் தான் கையில் வைத்திருந்த பதாகையில் `மோடி - பாகிஸ்தானிடமிருந்து எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்' என்றும் கூறியிருந்தனர்.

சுதந்திர பேரணி தொடர்பாக சிந்துதேஷ் இயக்கத்தின் தலைவர் ஷஃபி முகமது பர்ஃபாத் கூறுகையில், சிந்து மக்கள் அடக்குமுறைக்கு அடிபணிந்து பாகிஸ்தானின் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை. எனவே எங்கள் சுதந்திர வேட்கையை ஆதரிக்குமாறு உலக நாடுகளைக் கேட்டு

வருகிறோம். பயங்கரவாத பாகிஸ்தானிடமிருந்து விடுதலை கோருகிறோம் என்று தெரிவித்தார்.

You'r reading அடிமையாக வாழ விருப்பமில்லை.. மோடி படத்துடன் போராடிய பாகிஸ்தான் சிந்தி மக்கள் பேரணி! Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை