கடந்த ஜூன் மாதம் ஆப்போ ஏ12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டூயல் ரியர் காமி மற்றும் வாட்டர்டிராப்ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் உடன் இது விற்பனைக்கு வந்தது. கறுப்பு மற்றும் நீலம் இரு வண்ணங்களில் ஆப்போ ஏ12 ஸ்மார்ட்போன் உள்ளது.
3ஜிபி+32ஜிபி கொண்ட ஆப்போ ஏ12 ஸ்மார்ட்போன் ரூ.8,990/- ரூபாய்க்கும், 4ஜிபி+64ஜிபி ஆப்போ ஏ12 ஸ்மார்ட்போன் ரூ.11,490/- விலையிலும் விற்பனையாகி வந்தது. தற்போது இவற்றில் விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஆப்போ ஏ12 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
சிம்: இரட்டை நானோ சிம்
தொடுதிரை: 6.22 அங்குலம் எச்டி+; 720X1520 பிக்ஸல் தரம்
இயக்கவேகம்: 3 ஜிபி மற்றும் 4 ஜிபி
சேமிப்பளவு: 32 ஜிபி மற்றும் 64 ஜிபி (மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி 256 ஜிபியாக உயர்த்தலாம்)
முன்புற காமிரா: 5 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 13 எம்பி + 2 எம்பி ஆற்றல் (டூயல் ரியர் காமிரா)
பிராசஸர்: ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 SoC
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை; கலர்ஓஎஸ் 6.1
மின்கலம்: 4320 mAh
எடை: 165 கிராம்
4ஜி VoLTE, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், பின்புறம் விரல் ரேகை உணரி உள்ளது.
ஆப்போ ஏ12 ஸ்மார்ட்போனில் 3ஜிபி+32ஜிபி வகையானது தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.8,490/- விலையிலும் 4ஜிபி+64ஜிபி வகையானது தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.10,990/- விலையிலும் விற்பனையாகிறது.