காலை எழுந்ததும் இதைப் பருகினால் உடலுக்கு நல்லது.!

Mar 7, 2018, 13:07 PM IST

காலை உணவுக்கு முன்பாக நீராகாரங்கள் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. காலை எழுந்தவுடன் காபி குடிப்பதற்குப் பதிலாக நீராகாரங்கள் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

தண்ணீர் :

தினமும் காலை எழுந்தவுடன் குறைந்தபட்சம் 500 மில்லி அளவு தண்ணீர் பருகுவது உடலுக்கு மிகவும் நல்லது.

தினமும் தண்ணீர் குடிப்பதால், நம் உடலில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றத்தை 25மூ வரை வேகப்படுத்தும்.

எலுமிச்சை நீர் :

தினமும் காலையில் தண்ணீரில் எலுமிச்சை நீரை கலந்து குடித்து வந்தால் உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும்.  மேலும், குடல் இயக்கத்திற்கு ஊக்கமளிக்கும்.

பூண்டு நீர் :

வெறும் வயிற்றில் பூண்டை நன்கு இடித்து, அதை நீரில் கலந்து குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீராகும். மேலும், கல்லீரல் நன்கு செயல்பட உதவும்.

மஞ்சள் நீர் :

தினமும் காலையில் எழுந்ததும் நீரில் மஞ்சளை கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவானது குறையும்.

கிரீன் டீ :

காலையில் எழுந்ததும் கிரீன் டீ பருகி வர, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.  உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

இஞ்சி டீ :

காலையில் எழுந்ததும் இஞ்சி டீ குடித்து வர, புத்துணர்ச்சி கிடைக்கும். இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

You'r reading காலை எழுந்ததும் இதைப் பருகினால் உடலுக்கு நல்லது.! Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை