அடடே.. இஞ்சியில் இத்தனை மருத்துவ பயன்களா..!!!

Mar 8, 2018, 13:12 PM IST

இஞ்சியில் உடலுக்கு தேவையான அத்தனை மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. அவை குறித்து இங்கு பார்ப்போம்..

இஞ்சி, உணவின் ருசி கருதி  உணவுடன் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் கூட.இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல் என பொருள்படும். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று.

இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும்.வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும்  மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.அது மாத்திரமன்றி,இன்னும் பல மருத்துவ குணம்களையும் உடையது  இஞ்சி

இஞ்சி சாறை பாலில் கலந்து பருகுவதன் மூலம்  வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைவதோடு  உடம்பும் இளைக்கும். மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி என்பன நீங்க இஞ்சியை  துவையல், பச்சடி செய்து சாப்பிட வேண்டும்.இஞ்சியை சுட்டு சாப்பிடுவதன் மூலம் பித்த , கப நோய்கள் நீங்கும்.இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிடுவதன்  மூலம் பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் என்பன நீங்கும் அதேவேளை, சுறுசுறுப்பும்  ஏற்படும்.காலையில் இஞ்சி சாறில் உப்பு கலந்து மூன்று நாட்கள் பருகுவதன் மூலம்   பித்த தலைச்சுற்று மற்றும் மலச்சிக்கல் தீரும். உடம்பும் இளமை பெறும்.

பத்து கிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை என இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்தி வெந்நீர் குடித்துவர தொந்தி கரையும்.இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு கொதிக்க வைத்து அந்த நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

You'r reading அடடே.. இஞ்சியில் இத்தனை மருத்துவ பயன்களா..!!! Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை