குழந்தைகளுக்கு அறிவை வளர்க்கும்... பெரியவர்களுக்கு அல்சைமரைப் போக்கும் - வால்நட்...!

Health Benefits Of Walnut

by Dibrias, Aug 13, 2020, 10:46 AM IST

வாழ்க்கையின் பல்வேறு குறிக்கோள்களில் 'நம் குழந்தை புத்திசாலியாக இருக்கவேண்டும்' என்பது முக்கியமான ஒன்று. எவ்வளவோ சம்பாதித்து வாழ்வின் எல்லா நலன்களையும் பெற்றவர்கள் கூட பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்காவிட்டால் மிகவும் கவலையுறுவர். அந்தக் கவலையை நீக்கக்கூடியது வால்நட் பருப்பு.

வால்நட்டில் அடங்கியுள்ள சத்துகள்:

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய வேளாண்மை ஊட்டச்சத்து நிறுவனம் (USDA), 30 கிராம் வால்நட்டில் 200 கலோரி ஆற்றல் உள்ளது எனவும், 3.89 கிராம் கார்போஹைடிரேட், 1 கிராம் சர்க்கரை, 2 கிராம் நார்ச்சத்து, 5 கிராம் புரதம், 20 கிராம் கொழுப்பு, 20 மில்லி கிராம் கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து, 0.72 மில்லி கிராம் இரும்பு சத்து உள்ளது எனவும் மாங்கனீசு, செம்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6 ஆகியவை காணப்படுவதாகவும் கூறியுள்ளது.

புத்திசாலி குழந்தைகள்:

நரம்பு மண்டலத்தை பாதுகாக்கக்கூடிய வைட்டமின் ஈ, மெலோனின், ஃபோலேட் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் வால்நட்டில் காணப்படுகின்றன. நினைவாற்றல், கவனம், கூர்நோக்கு, சிந்தித்தல் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றுக்கு இவை உதவுகின்றன.

வளர்சிதை மாற்றத்தின்போது, Free radicals (ஃப்ரீ ராடிகல்ஸ் - நிலையற்ற மூலக்கூறுகள்) உருவாகின்றன. இவை நம் உடலிலுள்ள செல்களை பாதிக்கக்கூடும். இந்த நிலையற்ற மூலக்கூறுகளின் எண்ணிக்கை அதிகமாகும் நிலை ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் எனப்படுகிறது.

மூளையில் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸை குறைக்கக்கூடிய ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வால்நட்டில் உள்ளன. இவை மூளையில் சிக்னலிங் எனப்படும் சமிக்ஞையையும் நியூரான் உற்பத்தியையும் அதிகப்படுத்துகிறது. கர்ப்பிணிகள் வால்நட் சாப்பிடுவது கருவிலுள்ள குழந்தையின் மூளைக்கு நன்மை தரும். கருவுற்ற பெண்கள் தினசரி நான்கு முதல் ஐந்து வால்நட் (வால்நட்) பருப்புகளை சாப்பிடலாம்.


அல்சைமருக்கு எதிரான செயல்பாடு:

முதியவர்கள் மத்தியில் அதிகமாக காணப்படும் அல்சைமர் என்ற நினைவு குளறுபடி அல்லது ஞாபக மறதி குறைபாட்டிற்கு எதிராக செயல்படும் குணம் அல்ரூட்டுக்கு (வால்நட்) உள்ளது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மூளையிலுள்ள செல்கள் அழிதல் அல்லது இறத்தலின் காரணமாக அல்சைமர் குறைபாடு ஏற்படுகிறது. அல்சைமர் உள்ளோர் மத்தியில் நடத்தப்பட்ட 10 மாத ஆய்வு ஒன்று தினமும் 28 முதல் 45 கிராம் வால்நட் பருப்பு (வால்நட்) சாப்பிடுவோருக்கு மற்றவர்களை விட மூளையின் செயல்பாடு அதிகம் உள்ளதாக தெரிவிக்கிறது. இது இன்னும் ஆய்வு நிலையில் தொடருகிறது. பொதுவாக வால்நட் பருப்பு (வால்நட்) மூளை நன்றாக செயல்பட உதவுகிறது.

கருச்சிதைவை தடுக்கும்:

கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தத்தை சமநிலையில் பேணுவதற்கு வால்நட் (வால்நட்) உதவுகிறது. கர்ப்ப காலத்தின் முப்பருவத்தின் கடைசி நிலையில் (third trimester) இரத்த அழுத்தம் உயர்வதால் கருச்சிதைவு, குறைமாத பிரசவம், குழந்தை குறைந்த எடையுடன் பிறத்தல் ஆகிய ஆபத்துகள் நேரும். கர்ப்பிணிகள் தினமும் 1 அவுன்ஸ் (28 கிராம்) வால்நட் சாப்பிடுவது இப்பிரச்னைகளை தவிர்க்கும்.

எடை குறைப்புக்கு வால்நட்:

கர்ப்ப காலத்தில் எடை கூடுவது பொதுவான ஒன்று. ஆனால் எந்தப் பெண்ணுமே உடல் எடை கூடுவதை விரும்புவதில்லை; அது தாய்க்கும் குழந்தைக்கும் ஆரோக்கியமானதுமல்ல. வால்நட் பருப்பு அதிக கலோரி கொண்டதாயினும் எளிதாக உடலில் சேருவதால் பசியை குறைக்கிறது. அவற்றிலுள்ள ஊட்டச்சத்துகளுக்கானதை விட 21% குறைவான ஆற்றலே உடலில் சேர்கிறது. தொடர்ந்து ஒருவார காலம் வால்நட் சாப்பிட்டு வந்தால் இனிப்புகளின் மீதான நாட்டம் குறைவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில ஆய்வுகள் தொடர்ந்து வால்நட் சாப்பிடுவோருக்கு கேக், ஃப்ரெஞ்ச் ஃப்ரை போன்ற உணவுகளின் மீதான நாட்டத்தை கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் பகுதி சிறப்பாக செயல்படுவதாகவும் கூறுகின்றன. இவற்றால் உடல் எடை குறையும் வாய்ப்பு உள்ளது.

குறையும் புற்றுநோய் அபாயம்:

வால்நட்டுக்கு ஹார்மோன் தொடர்புடைய மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை தடுக்கும் இயல்பு உள்ளது. பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தையும் வால்நட் குறைக்கிறது.

வயிற்றுக் கோளாறுகளுக்கு நிவாரணம்

கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்றுக் கோளாறுகள் வருவது இயற்கை. அல்ரூட் பருப்பு (வால்நட்) சாப்பிடுவது வயிற்றிலுள்ள நன்மை தரும் நுண்ணுயிர்களுக்கு ஊட்டமளிக்கும். ஆகவே, அஜீரணம், வயிற்றுப் பொருமல், எருக்களிப்பு உள்ளிட்ட உபாதைகள் தடுக்கப்படுகின்றன.

இருதய நோய்கள் இல்லை

அழற்சி (Inflammation), இருதய நோய், இரண்டாம் வகை நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்குக் காரணமாகிறது. வால்நட் இந்த நோய்கள் ஏற்படும் அபாயத்தை தவிர்க்கிறது. குறைந்த அடர்த்தி உள்ள கொழுப்புப் புரதம் (எல்டிஎல்). எல்டிஎல் ரத்த பிளாஸ்மாவில் உள்ள புரதத்தோடு சேர்ந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்கிறது. எல்டிஎல், கல்லீரலில் உள்ள கொலஸ்ட்ராலை செல்களுக்குக் கொண்டு செல்கிறது. இதுதான் 'கெட்ட' கொலஸ்ட்ரால் எனப்படுகிறது.

வால்நட்டில் காணப்படும் பூரித கொழுப்பு அமிலங்கள், கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் எல்டிஎல்லை குறைக்கின்றன. இதனால் இரத்த தமனிகளில் கொழுப்பு உறைவது தவிர்க்கப்படுகிறது. இருதய நோய் ஏற்படும் அபாயம் நீங்குகிறது.

வால்நட் உணவு பொருள்கள்:

வால்நட் பருப்புகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது வறுத்து சாப்பிடலாம். அவற்றை நறுக்கி சாலட்டுகளின்மேல் தூவி உண்ணலாம். ஓட்மீல் உடன் வால்நட், உலர்திராட்சை சேர்த்து காலை உணவாக சாப்பிடலாம். இனிப்பூட்டப்பட்ட வால்நட், ஐஸ்கிரீம் மற்றும் பிரௌனி ஆகியவற்றின் மீது தூவி சாப்பிட நன்றாக இருக்கும்.

வால்நட் - முந்திரி பர்ஃபி

உடைக்கப்பட்ட வால்நட்டின் (வால்நட் பருப்பு) தோலை நீக்கவும். வாணலியில் தேக்கரண்டிக்கு கால் அளவு நெய் விட்டு, வால்நட் மற்றும் முந்திரி பருப்புகளை வறுக்கவும். பின்னர் மிக்ஸியில் பருப்புகளை இட்டு மெதுவாக இயக்கி பொடிக்கவும்.

சர்க்கரையில் அரை கிண்ணம் நீர் சேர்த்து பாகு காய்ச்சவும். கம்பியாக நீளும் பதத்துக்கு வந்ததும் ஏற்கனவே பொடித்து வைத்திருக்கும் பருப்புகளை போட்டு கிளறவும். இரண்டு நிமிடம் கழித்து நெய் சேர்த்து கிளறவும். வாணலியில் ஒட்டாமல் நுரைத்து வரும்போது, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து, நெய் தடவிய தட்டில் பரப்பவும். பின்னர் விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.

ஒவ்வாமை:

சிலருக்கு வால்நட் ஒவ்வாமையை (அலர்ஜி) ஏற்படுத்தக்கூடும். ஆகவே, கருவுற்ற நேரத்தில் முதன்முதலாக சாப்பிடுவதை தவிர்க்கலாம். முன்பு சாப்பிட்டு பழக்கமுள்ளவர்கள் கர்ப்ப காலத்திலும் சாப்பிடலாம்.

மொத்தத்தில் வால்நட் பருப்பு (வால்நட்) ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்றதாகும்.

You'r reading குழந்தைகளுக்கு அறிவை வளர்க்கும்... பெரியவர்களுக்கு அல்சைமரைப் போக்கும் - வால்நட்...! Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை